பஜகோவிந்தம் – 15
பசிபடுத்தும் பாடு
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ: |
பச்யந்நபி ச ந பச்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: ||
பதவுரை:
ஜடில: : சடை தரித்தவனும் (ரிஷி)
முண்டீ : மொட்டையடித்தவனும் (துறவி)
லுஞ்சிதகேச: : தலைமுடியை பிய்த்துக்கொண்டு
மொட்டையாக்கிக்கொள்கிறான்
(பிக்ஷு)
காஷாயாம்பர: : காஷாயத் துணி உடுத்தியவன்
(சந்நியாசி)
பஹுக்ருதவேஷ: : போட்டவனுமான
மூட: : மூடன்
பச்யந்நபி : பார்த்துக்கொண்டிருந்தாலும்
ந பச்யதி : பார்ப்பதில்லை
உதரநிமித்தம் : வயிற்றின் காரணமாக
பஹுக்ருதவேஷ: : அதிகமாக செய்யப்பட்ட வேஷத்தை
உடையவன்
கருத்து:
ஒருவன் சடாமுடி தரித்து ரிஷிபோல வேஷம் போடுகிறான். ஒருவனோ மொட்டையடித்துக் கொள்கிறான். மற்றொருவன் தலைமுடியை பிய்த்து எறிந்து தன்னை மொட்டையாக்கிக்கொள்கிறான். வேறொருவன் காஷாயத்தை அலங்காரமாக உடுத்திக்கொள்கிறான்.
இவ்வழியில் பலர் உண்மையாக இறைபக்தியுடன் நல் உள்ளத்துடன் திகழ்ந்தாலும், பல போலி வேடதாரிகள்-மூடர்கள் பலவகையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றுகின்றனர். இவ்வாறு இவர்கள் பலவகைகளில் வேஷம் போடுவதும்கூட, அவரவர் வயிற்றுப்பிழைப்பிற்காகத்தான். பசிபடுத்தும்பாட்டை நீக்குவதற்காகத்தான்.
சிறியதாக ஆரம்பிக்கும் வேஷங்கள், ஏமாற்றுவேலைகள் நாளடைவில் பெரிதாக உருவாகின்றன.
அவர்களை இனம்கண்டுகொண்டு ஒதுக்கி, நல்லோருடன் சேர்ந்து நலம் பெறவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply