பஜகோவிந்தம் -14

பஜகோவிந்தம் – 14

ஆசையை ஒழிக்கவேண்டும்:

 

கா தே காந்தா தநகத சிந்தா

வாதுல் கிம் தவ நாஸ்தி நியந்தா       |

த்ரிஜகதி ஸஜ்ஜந ஸங்கதி ரேகா

பவதி பவார்ணவ தரணே நௌகா    ||

 

பதவுரை:

 

கா                                    :  எவள்

தே                                    :  உனக்கு

காந்தா                           :  மனைவி

தநகத சிந்தா               :  பணத்தின்மீதுள்ள ஆசை

வாதுல                            :  மனமயக்கம் கொண்டவனே

கிம்                                  :  என்ன?

தவ                                   :  உன்னை

நாஸ்தி                           :  இல்லை

நியந்தா                         :  கட்டுப்படுத்துபவன்

த்ரிஜகதி                        :  மூவுலகிலும்

ஸஜ்ஜந                           : நல்லோர்களின்

ஸங்கதி                          :  சேர்க்கை

ஏகா                                  :  ஒன்றே

பவதி                                : ஆகிறது (இருக்கிறது)

பவார்ணவ தரணே    :  பிறவிக்கடலைக் கடப்பதற்கு

நௌகா                          :  ஓடமாக

 

 

கருத்து:

 

மனமயக்கம் கொண்டவனே! உனக்கு மனைவி என்பவள் யார்? பணத்தைப்பற்றி எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கிறாயே, அப்பணத்தாசை எப்படிப்பட்டது? எவ்வளவு கஷ்டங்களை அளிக்கும்? இவற்றையெல்லாம் இப்பொழுதே உணர்ந்துகொள்.

நல்லோர் சகவாசம் ஒன்றுமட்டுமே மூவுலகிலும் உன்னை இப்பிறவிக்கடலிலிருந்து கரையேற்றும் ஓடமாக அமையும் என்பதைத் தெரிந்துகொண்டு ஆசையை ஒழித்து நற்கதி அடைய முயற்சி செய்யவேண்டும் என ஆதிசங்கரர் வலியுறுத்துகிறார்.

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*