பஜ கோவிந்தம் – 11

13. காலத்தின் மாறுதல்

 

தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:

சிசிரவஸந்தௌ புனராயாத:  |

கால: க்ரீடதி கச்சத்யாயு:

ததபி ந முஞ்சத்யாசாவாயு:  ||

 

பதவுரை:

தினயாமின்யௌ                     –  பகலும் இரவும்

ஸாயம்                                          –  மாலையும்

ப்ராத:                                             –  காலையும்

சிசிர வஸந்தௌ                       –  சிசிரருதுவும் வஸந்தருதுவும்

புன:                                                –  மறுபடியும்

ஆயாத:                                         –  வந்துவிட்டது

கால:                                              –  காலம்

க்ரீடதி                                            –  விளையாடுகிறது

ஆயு:                                                –  ஆயுள்

கச்சதி                                             –  போகிறது

ததபி                                                –  அப்படியிருந்தும்

ந முஞ்சதி                                      –  விடுவதில்லை

ஆசாவாயு:                                    –  ஆசை எனும் காற்று

 

கருத்து:

 

காலம் பகலாகவும், இரவாகவும், காலையாகவும், மாலையாகவும், குளிர்காலமாகவும், வசந்தகாலமாகவும் மாறி மாறி தனது விளையாட்டை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு காலம் மாறுகையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முடிவிற்கு வருகிறது. இப்படி இருந்தும் ஆசைமட்டும் அகல்வதில்லை.

உயிர்காற்று ஒருநாள் நீங்குவது நிச்சயம் என்பதை அறிந்திருந்தாலும் ஆசைக்காற்றும் அடங்குவதில்லை என்கிற உண்மையை ஆதிசங்கரர் சுட்டிக்காட்டுகிறார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*