ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு.
அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம்.
ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம்.
ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது.
- ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது.
- ஸ்ரீவித்யையின் பேதங்களில் காதி என்று சொல்லப்படும் மந்த்ரமானது பிரதானமானது.
- புரங்களில் (இடங்களில்) ஸ்ரீபுரம் (லலிதாபரமேஸ்வரியின் இருப்பிடம்) பிரதானமானது.
- சக்திகளுள் லலிதாபரமேஸ்வரி பிரதானமானவள்.
- ஸ்ரீவித்யைக்காரர்களுக்கு சிவன் சிரேஷ்டமானவர்.
வித்யை என்பது ஒன்றைப்பற்றி அறிந்துக்கொண்டு அதை முறையே மனதில், செயல்முறையில் உருவேற்றி அதில் பூர்ணத்துவம் அடைவது.
இவ்வகையில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியைப்பற்றி அறிந்துகொண்டு, அவளது மேன்மைகளை மனதில் உருவேற்றி, பூஜை, பாராயணம், ஜபம் இவ்வாறான செயல்முறைகளால் லலிதாபரமேஸ்வரியின் பாதங்களைப்பணியும் மேன்மைவாய்ந்த செயலே ஸ்ரீவித்யை என்பது.
நான்குவித நவராத்திரி காலங்கள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமான காலங்களாகும். அதிலும் சாரதா நவராத்திரியில் அம்பாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. அவ்வகையில் இந்நவராத்திரி காலத்தில் ஸ்ரீவித்யையின் நாயகியான ஸ்ரீலலிதாபரமேஸ்வரியை வழிப்பட்டு மனநிறைவடைவோம்.
Leave a Reply