பஜகோவிந்தம் – 12
கர்வம் கூடாது
மாகுரு தந ஜந யௌவந கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா ||
பதவுரை:
மாகுரு : செய்யாதே (கொள்ளாதே)
தந ஜந யௌவந : சுற்றம், பணம், இளமை முதலான
காரணங்களால்
கர்வம் : கர்வத்தை
ஹரதி : எடுத்துச்சென்றுவிடும்
நிமேஷாத் : ஒரே நிமிடத்திற்குள்
கால: : காலம்
ஸர்வம் : அனைத்தையும்
மாயாமயம் (என்று) : மாயையைக்கொண்டது (என்று)
இதம் : இது
அகிலம் : எல்லாம்
ஹித்வா : விட்டுவிட்டு
ப்ரஹ்மபதம் : ப்ரம்ம நிலையை
த்வம் : நீ
ப்ரவிச : அடைவாயாக
விதித்வா : அறிந்து
கருத்து:
நான் சுற்றத்தாரையுடையவன், நான் பணக்காரன், இளமைபருவத்தினன் என்ற வகையில் கர்வம் கொள்ளக்கூடாது. ஒரே நிமிடத்தில் காலம் இவற்றையெல்லாம் கொள்ளைக்கொண்டுபோய்விடும்.
இந்த உலகெல்லாம் பொய்க்காட்சி, ப்ரம்மமே உண்மையானது என்று அறிந்துகொண்டு நீயே பிரம்மமாகிவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply