நா-காக்க

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர்.

இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம்.

  1. பொல்லாதவற்றை பேசாமல் இருக்க நா – காக்க
  2. சாப்பாடு கட்டுப்பாட்டிற்காக நா – காக்க

தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம்.

மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும்.

உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம்.

மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை எதிர்கொள்ளாமலும், நமது வேலைகளை நாமே செய்துகொள்ளமுடிவதோடு உற்சாகத்துடனும் இருக்கலாம்.

நாக்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதாலேதான் இறைவன், 32 பற்களால் அரண் அமைத்து, அதையும் வாய் தசையை வைத்து மூடி இருக்கும்படி வைத்துள்ளார். தேவையற்றபோது மூடிவைத்துக்கொள்ள கண்களுக்கும் நாக்கிற்கும் இமைகளையும் இதழ்களையும் முறையே அளித்துள்ளார் இறைவன்.

இவற்றை சரிவர பயன்படுத்துவதனால் இதனைவிட மிகப்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மூளையை அறத்தின் வழி செயல்படுத்தி, இவை எல்லாவற்றையும்விட மேலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஆன்மாவை பாதுகாக்கலாம். ஆன்மத் தூய்மையே மேலான தூய்மையாகும்.

எண்ணங்கள் சிறந்ததாக இருந்தால் யாவும் சிறப்பாக இருக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*