தெரிந்ததும் தெரியாததும்
1. கமலக்ஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன?
2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை?
3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது?
4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே?
5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே?
6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை?
பதில்கள்
1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் – சிவனின் சாபத்தைப் (ப்ரம்மஹத்தி தோஷம்) போக்கிய தலம்.
கமலவல்லி நாச்சியார் உள்ள இத்தலத்தில் கமலாக்ருதி விமானம் (தாமரை அமைப்பு) உள்ளது. இது ஸ்ரீ ரங்கத்தைவிட பழமை வாய்ந்த திருப்பதி ஆகும்.
2.விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எட்டு. அவை
தலம் பெருமாள்
i. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்
ii. ஸ்ரீ முஷ்னம் பூவராகர்
iii. திருப்பதி ஸ்ரீ நிவாசர்
iv. நைமிசாரண்யம் ஸ்ரீ ஹரி
v. புஷ்கரம் பரமபுருஷன்
vi. சாளிக்ராமம் ஸ்ரீ மூர்த்தி
vii. பத்ரிகாஸ்ரமம் பத்ரிநாராயணன்
viii. வானமாமலை தோதாத்ரிநாதர்
3. அப்பக்குடத்தான் என்ற பெயரில் கோவிலடி (திருவையாறு அருகே) என்ற ஊரில் உள்ளார்
4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்த இடம் காஞ்சிபுரம் ஆகும்.
5 விஷ்ணு ப்ரலகாசூரனை பரிக்கல் என்ற இடத்தில் வதம் செய்தார்.
5. பஞ்ச ஆயுதங்கள் – சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், கட்கம்
Leave a Reply