சக்தி – துர்கா

சக்தி:

1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன?

2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன?

3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்?

4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்?

5. துர்க்கை தோன்றிய நாள் எது?

6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் எது?

7. வெக்காளியம்மன் திருக்கோவில் எங்கு உள்ளது?

8. வக்கிரகாளியும் வரதராஜ பெருமாளும் உறையும் இடம் எது?

9. மங்கள சண்டி – பெயர்க்காரணம் என்ன?

10. துர்க்கைக்கு எந்த எண்ணைகளில் தீபம் ஏற்றுவது நல்லது?

பதில்கள் இங்கே:

1. துர்கமன் என்ற அசுரனைக் கொன்றதால் துர்கா என்ற பெயர் பெற்றாள் சக்தி. துர்கை என்றால் தீயவற்றை அழிப்பவள் என்று பொருள்.

2. காசி விசாலாக்ஷி

3.மதுரையில் மீனாட்சி அவதாரத்தில் சிவபெருமான் சௌந்தரபாண்டியனாய் உருவெடுத்து வந்த போது!!

4. செவ்வாய்

5.விரைவில் பதிவு செய்யப்படும்…

6.திருவானைக்காவல்

7.உறையூர்

8.திருவக்கரை பெரும்பாக்கத்தின் தெற்கே 7 கி.மீ அல்லது திருகானூர் வடக்கே 5 கீ.மி தொலைவில் உள்ளது. விஷ்ணு வக்ராசுரனை வதம் செய்ததாலும், பார்வதி தேவி வக்ராசுரனுடைய சகோதரியான துன்முகியைக் கொன்று அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை குண்டலமாகக் கொண்டு வக்ரமாக இருந்ததால் வக்கிரகாளி என்ற பெயர் பெற்றாள்.

9. மங்கள சண்டீ- மங்கள் எனபது செவ்வாய் பகவானைக் குறிக்கும். அவர் வழிபட்டதால் மங்கள சண்டீ எனறு பெயர்.

10. வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*