ஆசாரக் கோவை

ஆசாரக்கோவை என்னும் இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுல் ஒன்றாகும். இந்நூலில் ஆசிரியர் வண்கயத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியார். இந்த நூலின் மூலநூல் ‘ஆரிடம்’ என்னும் வடமொழி நூலாகும். இதில் உள்ள ஆசாரங்கள் ‘சுக்ர ஸ்மிருதி’ எனும் நூலில் உள்ளவை ஆகும்.

  1. நல்லொழுக்கம்
  2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
  3. ஒருமனதோடு செய்யவேண்டியவை
  4. விடியற்காலையில் செய்யவேண்டியவை
  5. எச்சிலுடன் தொடக்கூடாதவை
  6. காணக்கூடாதவை
  7. நால்வகை எச்சில்
  8. எச்சிலுடன் செய்யக்கூடாதவை
  9. காலை மற்றும் மாலையில் கடவுளை வணங்கும் முறை
  10. நீராடுதலின் இன்றியமையாமை
  11. ஆடையணிதல்
  12. செய்யக்கூடாதவை
  13. செய்யத்தகாதவை
  14. குளிக்கும்போது செய்யக்கூடாதவை
  15. தன் உடல்போல் போற்றவேண்டுபவை
  16. வழிபட வேண்டியவர்கள்
  17. நல்லறிவாளர் செய்பவை
  18. சாப்பிடும் முறை
  19. கால்கழுவியபின் செய்யவேண்டியவை
  20. சாப்பிடவேண்டிய முறை
  21. பிறருக்கு ஈதல்
  22. சாப்பிடும் திசை
  23. சாப்பிடும்போது கடைப்பிடிக்கவேண்டியவை
  24. பெரியோர்களுடன் சேர்ந்து உண்ணல்
  25. சாப்பிடும் விதம்
  26. சாப்பிடும் பாத்திரங்கள்
  27. வாயை சுத்தம் செய்யும் முறை
  28. தண்ணீர் குடிக்கும் முறை
  29. அந்திப்பொழுதில் செய்யக்கூடாதவை
  30. தூங்கும்முன் செய்யவேண்டியவை
  31. குறுக்கிடாமல் இருத்தல்
  32. சில இடங்களில் செய்யத்தகாதவை
  33. மலசலம் கழிக்கும் திசை
  34. மலசலம் கழிக்கையில் செய்யவேண்டியவை
  35. வாயைக்கழுவக்கூடாத இடங்கள்
  36. நற்செயல்கள்
  37. நரகத்தில் கொண்டுவிடுபவை
  38. சிந்திக்கக்கூடாதவை
  39. தன்னலம் கருதாமை
  40. மரியாதைக்குறைவாய் நடத்தல் கூடாது
  41. பொதுவாக செய்யவேண்டிய மற்றும் வேண்டாதவை
  42. மனைவியை நீங்கியும் நீங்காமலும் இருக்கவேண்டிய காலங்கள்
  43. சேரக்கூடாத நேரங்கள்
  44. வீட்டிற்கு ஆகாத செயல்கள்
  45. பந்தலில் பரப்பக்கூடாதவை
  46. வீட்டைப் பராமரிக்கும் முறை
  47. வேதம் ஓதக்கூடாத காலங்கள்
  48. விருந்தினரை உபசரிக்கும் காலங்கள்
  49. அவரவர்க்குத் தக்கப்படி அமைபவை
  50. அறிஞர்கள் செய்யக்கூடாதவை.
  51. கண் ஒளியும் புகழும் கெடாமல் இருக்க
  52. சொல்லக்கூடாதவை

குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா வகைகளில் அமைந்த நூறு வெண்பாக்களைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஐந்தைந்து வெண்பாக்களாக இந்த ஆசாரக்கோவையை அறிந்துகொள்வோம்.

ஆசாரக்கோவை

– பெருவாயின் முள்ளியார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*