எண்களின் சிறப்பு – எண்-5

எண் – 5

தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி

தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர்.

ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம்

பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி

கங்கைகள் ஐந்து – காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணவேணி, கௌதமி & பாகீரதி

பட்சக்கள்(உண்ணும் முறை) ஐந்து – பட்சியம், போஜ்யம், லேகியம், சோஷியம், பாளீயம்
(கடித்துண்ணல், விழுங்குதல், நக்கியுண்ணல், பருகுவது & உறிஞ்சி சாப்பிடல்.

கௌவியங்கள் ஐந்து – பசுவின் சாணி, பசு மூத்திரம், பசுவின் பால், பசுவின் பாலால் தயாரித்த வெண்ணெய், நெய்.

இயற்கை ஐந்து – நிலம், நீர், நெருப்பு, காற்று & ஆகாயம்.

நாளின் அங்கங்கள் ஐந்து – திதி, நாள், நட்சத்திரம், யோகம் & கரணம்

விஷ்ணுவின் ஆயுதங்கள் ஐந்து – சங்கு, சக்கரம், கதை, கட்கம் & சார்ங்கம்

அமிர்தங்கள் ஐந்து – நீர், பால், தயிர், நெய் & தேன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*