பஜகோவிந்தம் – 27

பஜகோவிந்தம் – 27

ஆன்மஞானியாதல்:

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மாநம் பாவய கோऽஹம் |
ஆத்ம ஜ்ஞாந விஹீநா மூடா:
தே பச்யந்தே நரக நிகூடா: ||

பதவுரை:

காமம் – ஆசை
க்ரோதம் – கோபம்; வெறுப்பு
லோபம் – பணத்தாசை
மோஹம் – மயக்கம்
த்யக்த்வா – விட்டுவிட்டு
ஆத்மாநம் – தன்னைப்பற்றி
பாவய – நினைத்துப்பார்
க: – யார்
அஹம் – நான்
ஆத்மஜ்ஞாந விஹீநா: – ஆன்மஞானமில்லாதவர்களோ
தே – அவர்கள்
பச்யந்தே – துன்பத்தை அனுபவிக்கிறார்கள்
நரகநிகூடா: – நரகத்தில் மூழ்கி

கருத்து:

நான் யார்? என்பதை அறிதலாகிய ஆன்மஞானமில்லாத மூடர்கள் நரகத்தில் உழல்வார்கள். ஆகவே, காமம், கோபம், பணத்தாசை, மதிமயக்கம் என்பவைகளைத் துறந்து நான் யார்? என்பதை எப்பொழுதும் சிந்தனை செய்யவேண்டும். நம்மை நாம் அறிந்தால் – ஆன்மாவை நோக்கிய இச்சிந்தனை வாழ்வை செம்மைப்படுத்தும் என்பதன்மூலம் ஆன்மஞானியாதலின் பெருமையை அனைவருக்கும் உணர்த்துகிறார் ஆதிசங்கரர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*