பஜகோவிந்தம் – 26
எல்லோரும் சமம்:
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்நம் விக்ரஹஸந்தௌ|
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ச்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்||
பதவுரை:
சத்ரௌ – பகைவனிடத்திலும்
மித்ரே – நண்பனிடத்திலும்
புத்ரே – பிள்ளையிடத்திலும்
பந்தௌ – உறவினனிடத்திலும்
மா குரு – செய்யாதே
யத்நம் – முயற்சியை
விக்ரஹ ஸந்தௌ – சண்டை செய்வதிலும், சமாதானம் செய்வதிலும்
பவ – இருப்பாயாக
ஸமசித்த: – ஒரே விதமான மனமுள்ளவனாக
ஸர்வத்ர – எல்லாரிடத்திலும்
த்வம் – நீ
வாஞ்ச்சஸி யதி – விரும்புவாயானால்
விஷ்ணுத்வம் – விஷ்ணுத்தன்மையை (மேலான நிலையை)
கருத்து:
விரைவில் மோக்ஷம் எனும் மேலான நிலையை அடையவேண்டுமென்று விரும்பினால், பகைவன், நண்பன், மகன், உறவினன் என நம்மைச் சுற்றியுள்ள யாரிடமும் பகைமையையோ, நட்பையோ பாராட்டாமல் ஸமசித்தத்துடன் பழகவேண்டும். எல்லோரையும் ஸமமாக பாவிக்கவேண்டும். இதன்மூலம் மேலான கதியை அடையலாம் என்கிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply