பஜகோவிந்தம் – 21

பஜகோவிந்தம் – 21

பாவங்களின் தண்டனைகளிலிருந்து விடுதலை:

பகவத்கீதா கிஞ்சிததீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா|
ஸக்ருதபி யேந முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா||

பதவுரை:
பகவத்கீதா – பகவத் கீதையானது
கிஞ்சித் – கொஞ்சமாவது
அதீதா – கற்கப்பட்டதோ
கங்கா ஜல லவ கணிகா – கங்கை நீரின் ஒரு துளியாவது
பீதா – பருகப்பட்டதோ
ஸ்க்ருத் அபி – ஒரு முறையாவது
ஏன – எவனாலே
முராரி ஸ்மர்ச்சா – விஷ்ணு பூஜை
க்ரியதே – செய்யப்படுகிறதோ
தஸ்ய – அவனுக்கு
யமேந – எமனாலே
ந சர்ச்சா – பேச்சுவார்த்தை(தர்க்கம்) இல்லை.

கருத்து:

எவர் தன் வாழ்நாளில் பகவத்கீதை என்ற புனிதமான நூலின் ஒரு சிறு பகுதியையாவது படித்தாரோ, கங்கை நீரின் ஒரு துளியையாவது பக்தியுடன் பருகினாரோ, ஒரு முறையாவது மனப்பூர்வமாக பகவானுக்குப் பூஜை செய்தாரோ அவரைப்பற்றி எமன் பேசுவதேயில்லை. அதாவது அவரது பாபக்கணக்குகளைப்பற்றி சர்ச்சை செய்வதேயில்லை என்பதன் மூலம் பகவத்கீதை, கங்கை நீர் மற்றும் இறைப்பூஜை ஆகியவற்றின் மகிமைகளை உணர்த்துகிறார் ஆதிசங்கரர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*