பஜகோவிந்தம்- 20
பிரம்மானந்தம்:
யோகரதோ வா போகரதோ வா
ஸங்கரதோ வா ஸங்க விஹீந: |
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ ||
பதவுரை:
யோகரத: வா – யோகத்தில் ஈடுபட்டவராக
இருந்தாலும்
போகரத: வா – போகத்தில் ஈடுபட்டவராக
இருந்தாலும்
ஸங்கரத: வா – மற்றவர்களோடு பழகுவதில்
ஈடுபாடுவுடையவராக இருந்தாலும்
ஸங்க விஹீந: – பிறர் சேர்க்கையில்லாதவர்களாக
இருந்தாலும்
யஸ்ய – எவருடைய
ப்ரஹ்மணி – பிரம்மத்தில்
ரமதே – பற்றுக் கொண்டிருக்கிறதோ
(ஸ: – அவனது)
சித்தம் – மனதானது
நந்ததி நந்ததி நந்தத்யேவ – மகிழ்கிறான், மகிழ்கிறான்,
முக்காலமும் மகிழ்கிறான்.
கருத்துரை:
ஒருவர் யோகத்தில் ஈடுபட்டிருப்பினும், போகத்தில் ஈடுபட்டிருப்பினும், மற்றவருடன் சேர்க்கையில் இருப்பினும், இல்லாவிடினும், எந்நிலையில் இருப்பினும் அவரது மனமானது பிரம்மத்தின் மீது நிலைத்திருக்குமேயாகில் அவர் எக்காலமும், எந்நேரமும் பரமானந்த நிலையிலேயே இருப்பார்.
Leave a Reply