திருவெம்பாவை – பாசுரம் 9

திருவெம்பாவை – பாசுரம் 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்!
உன்னடியார் தாள்பணிவோம்! ஆங்கவர்க்கே பாங்காவோம்!
அன்னவரே எங்கணவர் ஆவார்! அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

– மாணிக்கவாசகர்

 

விளக்கம் :

     எம்பெருமானே! நீ பழையைக்கெல்லாம் பழையான மூலப்பொருள். புதுமைகளுக்கெல்லாம் புதுமையான சிவபரம்பொருளே. புதுமைகளுக்கெல்லாம் புதுமையாக நின்று அவற்றுக்கு உயிரூட்டுபவனும் நீயே. 

     உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*