பஜகோவிந்தம் – 16
ஆசையின் ஆதிக்கம்
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசந விஹீநம் ஜாதம் துண்டம் |
விருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் ||
பதவுரை:
அங்கம் : உடல்
கலிதம் : தளர்ந்துவிட்டது
பலிதம் : முடி நரைத்துவிட்டது
முண்டம் : தலை மொட்டையாகிவிட்டது(வழுக்கையாகிவிட்டது)
தசந விஹீநம் : பற்களற்ற
துண்டம் : வாயாகவும்
ஜாதம் : ஆகிவிட்டது
வ்ருத்த: : கிழவன்
யாதி : செல்கிறான்
க்ருஹீத்வா : பிடித்துக்கொண்டு
தண்டம் : தடியை
ததபி : அப்படியிருந்தும்
ந முஞ்சதி : விடுபடுவதில்லை
ஆசாபிண்டம் : பலவகையான ஆசைகளும்
கருத்து:
வயது முதிர்ச்சியினால், ஒருவனது உடலானது தளர்ந்தும், தலை நரைத்தும், தலைமுடிகள் கொட்டியும் (மொட்டையாவதும்), பற்கள் உதிர்ந்தும், தள்ளாமையும் ஏற்படுகின்றன. அந்த நிலையில் தடியைப் பிடித்துக்கொண்டு நடக்கிறான். அத்தகைய நிலையிலும் பல்வேறு ஆசைகளுடனேயே வாழ்கிறான்.
வாழ்வின் பலகட்டங்களை சந்தித்தப்பிறகும் உயிர் உடலைவிட்டுப் பிரியும் வரை ஆசையே மனிதரிடம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதனை உணர்த்துகிறார் ஆதிசங்கரர்.
Leave a Reply