11. ஆசையும் பொருளும் நிலையற்றவை
வயஸி கதே க: காமவிகார:
சுஷ்கே நீரே க: காஸார: |
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார: ||
பதவுரை:
வயஸி – வயதானது
கதே – கழிந்துவிட்டபோது
காமவிகார: – காமத்தின் செயல்கள்
க: – ஏது?
நீரே – நீரானது
சுஷ்கே – உலர்ந்துவிட்டால்
காஸார: – தடாகம்
க: – ஏது?
வித்தே – செல்வமானது
க்ஷீணே – குறைந்துவிட்டால்
பரிவார: – சுற்றம்
க: – ஏது?
தத்வே – உண்மைப்பொருளானது
ஜ்ஞாதே – அறியப்பட்டபோது
ஸம்ஸார: – பிறவியாகிய ஸம்ஸாரம்
க: – ஏது?
கருத்து:
இளமைப்பருவம் தாண்டிவிட்டால் காமத்தால் ஏற்படும் செயல்கள் இராது. தண்ணீர் இல்லாவிட்டால் நீர்நிலைகள் இருக்காது. பணம் இல்லாவிட்டால் சுற்றத்தாரில் பெரும்பாலோர் அருகில் இருக்கமாட்டார்கள். பரம்பொருளை அறிந்துவிட்டால் பிறப்பும் இறப்புமாகிய இந்த ஸம்ஸாரம் இருக்காது.
ஆகவே, நிலையற்றதான இன்பத்திற்காகவும் பொருளுக்காகவும், வீணில் காலத்தைக் கழிக்காமல், அழிவற்றதான, நிலைத்த பரம்பொருளை அறிந்து பிறவாமை இன்பத்தைப் பெறுவதே சிறந்தது.
Leave a Reply