10. நல்லோருடன் இணங்கியிருக்கவேண்டும்
ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி:
பதவுரை:
ஸத்ஸங்கத்வே – நல்லோரின் சேர்க்கை ஏற்பட்டால்
நிஸ்ஸங்கத்வம் – பற்றற்ற நிலை ஏற்படும்
நிஸ்ஸங்கத்வே – பற்றற்ற நிலை ஏற்பட்டால்
நிர்மோஹத்வம் – மோஹமற்ற நிலை ஏற்படும்
நிர்மோஹத்வே – மோஹமற்ற நிலை ஏற்பட்டால்
நிச்சலதத்வம் – நிலையா உண்மைப் பொருள் தோன்றும்
நிஸ்சலதத்வே – நிலையான உண்மைப்பொருள்தோன்றினால்
ஜீவன்முக்தி: – ஜீவன்முக்தி நிலை ஏற்படும்
கருத்து:
உண்மைப் பொருளை அறிந்த நல்லோர்களுடன் சேர்ந்து பழகினால் உலகப் பற்றை அறுக்கலாம். உலகப்பற்றை நீக்கினால் மயக்கம் தொலையும், அதன்மூலம் நிலையான பரம்பொருளை அறியலாம். அதை அறிந்தால் இந்த உலகில் வாழ்ந்திருக்கும்போதே ஞானியாக அதாவது ஜீவன்களில் முக்தராக ஆகிவிடுவர். இவ்வுலகிலேயே பேரின்பநிலையை அடைய ஆதிசங்கரர் வழிகாட்டுகிறார்.
பஜிப்பது தொடரும்…
Hi, I read your blog like every week. Your writing style is awesome, keep up the good work!| Faunie Stanislas Ambrose
thank you for your kind words