பஜகோவிந்தம் – 8

பஜகோவிந்தம் – 8

தெய்வ சிந்தனைத் தேவை

பாலஸ்தாவத் க்ரீடாஸக்த:
தருணஸ்தாவத் தருணீஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த:
ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: ||

பதவுரை:

பால: தாவத்                           – பாலகனோவென்றால்

க்ரீடாஸக்த:                           – விளையாட்டில் பற்றுக் கொண்டுள்ளான்

தருண: தாவத்                       – யௌவன வயதுள்ளவனோவென்றால்

தருணீஸக்த:                          – யௌவனப் பெண்ணிடம் பற்றுக்கொண்டுள்ளான்

வ்ருத்த: தாவத்                       – கிழவனோவென்றால்

சிந்தாஸக்த:                           – பயனற்ற கவலையில் ஈடுபட்டுள்ளான்

பரே ப்ரஹ்மணி                    – இறைவனிடம்

கோऽபி                                       – எவனும்

ந ஸக்த:                                      – பற்றுக் கொண்டானில்லை

கருத்து:

மனிதர்கள் யாவருக்கும் வாலிபம், இளமை, வயோதிகம் என மூன்று பருவங்கள் உள்ளன. குழந்தைகள் விளையாடுவதில் காலம் கழிக்கின்றனர். இளவயதினர் கற்பதில் கழிக்கின்றனர், நடுத்தரவயதுடையவர்கள் குடும்பம் நடத்துவதில் காலத்தைப்போக்குகின்றனர். வயோதிகர்கள் கவலைகளாலும், மூப்பின் துன்பத்தாலும் பீடிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இதனால் யாரும் எந்தப் பருவத்திலும் தெய்வத்தை மட்டுமே பற்றிக்கொண்டு அச்சிந்தைனையிலேயே இருப்பதில்லை. நமக்குமேல் உள்ள சக்தியான நம்மைப்படைத்த இறைவனின் மேல் பக்திகொண்டு, சிந்தித்து ஆராதனையை காலந்தோறும் செய்துவர வேண்டும் என்பது ஆதிசங்கரர் கருத்தாகும்.

பஜிப்பது தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*