பஜகோவிந்தம் – 7
பணமென்பது துன்பமே
அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் |
புத்ராதபி தநபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ||
பதவுரை:
அர்த்தம் – பணத்தை
அநர்த்தம் – துன்பம்
பாவய – நினை
நித்யம் – தினமும் / எப்பொழுதும்
நாஸ்தி – இல்லை
தத: – அதிலிருந்து
ஸுகலேச: – சிறிதளவு சுகமும்
ஸத்யம் – உண்மை
புத்ராத் அபி – பிள்ளையிடம் கூட
தநபாஜாம் – பணத்தைச் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு
பீதி: – பயம்
ஸர்வத்ர – எங்கும் / எல்லா இடங்களிலும்
ஏஷா – இந்த
விஹிதா – ஏற்பட்டதுதான்
ரீதி: – முறை
கருத்து:
பணத்தை சுகமானது, சுகம் தருவது என்று எண்ணாதே. அது எப்பொழுதும் துன்பத்தைத் தருவதுதான் என்று நினைத்துக்கொள். அதனால் சிறிதும் சுகமில்லை. பணத்தைச் சேமித்து வைத்திருப்பவர்களுக்குப் பிள்ளையிடம்கூட பயம்தான். எல்லாவிடங்களிலும் பணத்தால் முடிவில் ஏற்படக்கூடியது துன்பதான் என்று பணம்/செல்வத்தைப்பற்றியும் அதன்மேல் வைக்கும் பற்றினால் விளையும் துன்பங்களைப்பற்றியும் விளக்குகிறார் ஆதிசங்கரர்.
பஜிப்பது தொடரும்…
Leave a Reply