பஜகோவிந்தம் – 6

6. உயிர் உள்ளவரைதான் உறவு

யாவத் பவநோ நிவஸநி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே |
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மிந் காயே ||

 

யாவத் – எதுவரை

பவந: – மூச்சுக்காற்று

நிவஸதி – வாசம் புரிகிறதோ

தேஹே – உடலில்

தாவத் – அதுவரை

ப்ருச்சதி – கேட்கிறார்

குசலம் – க்ஷேமத்தைப்பற்றி

கேஹே – வீட்டில்

கதவதி – சென்ற பிறகு

வாயௌ – ப்ராண வாயுவானது

தேஹாபாயே – உடல் அழியும்போது

பார்யா – மனைவி (யும்)

பிப்யதி – பயப்படுகிறாள்

தஸ்மிந் – அந்த

காயே – உடலைக்கண்டு

 

கருத்து:

 

ஒருவன் உயிரோடு உலவிவரும்போது வீட்டிலுள்ள அனைவரும் அவனுடைய க்ஷேமத்தைப்பற்றி அடிக்கடி விசாரிக்கிறார்கள். ஆனால் அவன் உயிர் பிரிந்தபின் க்ஷேமத்தைப்பற்றிக் கேட்க ஏதுமில்லை. அவன் மனைவிகூட அவ்வுயிரற்ற உடலைப்பார்த்து பயப்படுகிறாள் என்று வாழ்வின் நிலைகுறித்து எடுத்துரைக்கிறார் ஆதிசங்கரர்.

 

பஜிப்பது தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*