- அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும்.
- பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம்.
- பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும்.
- தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து துவைக்க துணிகள் பளிச்சென்றாகும்.
- சுவாமி படங்களை துடைக்கும்போது நீருடன் சிறிது கற்பூரத்தையும் சேர்ந்து துடைத்தால் படங்களைப் பூச்சி அரிக்காது.
- இரும்பு டூல்ஸ் மற்றும் ஆணிகள் உள்ள பெட்டியில் சிறு அளவு கரித்துண்டைப் போட்டுவைத்தால் துறுபிடிக்காமல் இருக்கும்.
- பெல்டில் அதிகப்படியான துளைகள் போடவேண்டியிருந்தால், கோணி ஊசியை பழுக்கக் காய்ச்சி பெல்டில் துளை தேவையான இடத்தில் வைக்கவும்.
- கண்ணாடி மேஜையின் மேல் உள்ள அழுக்கை நீக்க அதன்மேல் டால்கம் பவுடர் அல்லது கடலை மாவை சிறிதளவு தூவி பிறகு நன்றாக துடைக்கவும்.
- முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்கானால், அதன்மேல் சிறிதளவு தண்ணீரைத் தெளித்துவிட்டு நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்துவிடவும்.
- ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பரை வாங்கி வந்து, வாணலி, தோசைக்கல் ஆகியவற்றை தண்ணீரில் கழுவிவிட்டு, இந்த பேப்பரைக்கொண்டு தேய்த்து, பின்பு கழுவினால் அப்பாத்திரங்களின் கறுப்பும், பிசுபிசுப்பும் நீங்கிவிடும்.
தொடரும்…
Leave a Reply