வீட்டுக் குறிப்புகள் -2

  1. மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும்.
  2. எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும்.
  3. கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக மீதமுள்ளவைகள் காய்ந்துவிடும், அவற்றை சாம்பார் பொடி, ரசப்பொடி, கருவேப்பிலை பொடி என்பவை செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
  4. தேங்காயை தண்ணீரில் நனைத்துவிட்டு அல்லது 2 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு உடைத்தால் சமமாக உடையும்.
  5. மெழுகுவர்த்தியை ஏற்றிவைக்கும்போது ஒரு அகலிலோ அல்லது கிண்ணத்திலோ வைத்தால் மெழுகுவர்த்தி எரியும்போது வழியும் மெழுகுகள் தரையையும் வீணாக்காது, மெழுகும் வீணாகாது. அவ்வாறு அகலில் அல்லது கிண்ணத்தில் வழிந்த மெழுகில் ஒரு திரியைப் போட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  6. புத்தகம் மற்றும் பாத்திரங்கள் உள்ள அலமாரிகளில் சிறிது வசம்பை போட்டுவைத்தால் பூச்சிகள் அண்டாது அலமாரிகள் வாசனையுடன் இருக்கும்.
  7. மொசைக் தரையில் கோலம் போடும்போது கரைத்த கோலமாவில் சிறிதளவு ஃபெவிகாலை கலந்துவிட்டு போட்டால் வெகுநாட்கள் பளிச்சென்றிருக்கும்.
  8. வெங்காயத்தை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பிறகு எடுத்து நறுக்கினால் கண்களில் நீர் வழியாது.
  9. உயபோகப்படுத்தாத குக்கரில் வைக்கும் அலுமினியப்பாத்திரங்கள் இருந்தால் அவற்றின் அடியில் சிறு ஓட்டைகள் போட்டுவைத்துக்கொண்டு காய்கறி அலசவும், அரிசி களையவும் பயன்படுத்தலாம்.
  10. தடியாக உள்ள மெழுவர்த்தியின் திரியைச் சுற்றியுள்ள மெழுகை சிறிதளவு சுரண்டிவிட்டு அதில் எண்ணெய் ஊற்றி எரியவைத்தால் மெழுகு உருகி கொட்டுவது குறையும்.                                                          தொடரும்…….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*