- புத்தகம், தரை இவற்றில் எண்ணெய் கொட்டிவிட்டால் உடனே கோலமாவை எண்ணெய் சிந்திய இடத்தில் தூவிவிட்டு சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை அகன்றுவிடும்.
- வேலைப்பாடுகள் நிறைந்தப் பொருட்களை காட்டன் பட்ஸ் கொண்டு துடைத்தால் எளிதில் அதில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கும்.
- க்ரைண்டரில் குழவி வைக்கும் ஸ்டாண்ட் வளையத்தில் கூடைப்போடப் பயன்படும் ஒயரை சுற்றி வைத்தால் துருபிடிக்காமல் இருப்பதுடன், பார்க்க அழகாகவும் இருக்கும்.
- தண்ணீரைக் கொதிக்க வைக்கப்பயன்படுத்துவதனால் சில ஸ்டீல் பாத்திரங்களில் வெள்ளையாகக் கறைப் படிந்திருக்கும். அது எளிதில் போக, அந்த பாத்திரத்தில் இரண்டு நாட்களுக்கு அரிசியை ஊறவைத்திருந்து பின்பு தேய்க்கவேண்டும்.
- பொலிவிழந்திருக்கும் பட்டு அல்லது பிரிண்டெட் பட்டுப்புடவைகளை, துவைத்து பின்னர், அரைபக்கெட் குளிர்ந்த நீரில் 1 டீஸ்பூன் சாதாரண கோந்து சேர்த்துக் கலக்கியபின் அப்புடவைகளை அமிழ்த்தி எடுத்து உலர்த்தவும்.
- அடர்ந்த நிறம் கொண்ட துணிகளுக்குக் கஞ்சி போடும்போது அவற்றை உள் பக்கம் வெளியில் இருக்குமாறூ திருப்பி கஞ்சியில் நனைக்கவும். இவ்வாறு செய்தால் துணிகளின் வெளிப்பக்கத்தில் கஞ்சி அடையாளம் கோடுகளாகவோ, கறைகளாகவோ தெரியாமல் இருக்கும்.
- ரோஜாச் செடி அழகாக நிறையப்பூக்கள் பூக்க, பீட்ரூட்டின் தோலையும், வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போடவேண்டும்.
- மழைக் காலத்தில் துணிகள் வைக்கும் பீரோக்கள் மற்றும், கப்போர்ட்டுகளில் ஈரப்பதம் ஈரக்காற்று ஆகியவற்றால் துணிகளில் ஒரு தொய்வு காணப்படும். இதனைத் தவிர்க்க பத்து சாக்பீஸ்களை ஒரு நூலில் கட்டி தொங்கவிடவேண்டும். இதனால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு துணிகள் நன்றாக இருக்கும்.
- வெள்ளை நிற வாஷ்பேசன் மற்றும் டைல்ஸ்களை க்ளீனிங் பவுடர்களைக்கொண்டு சுத்தம் செய்தபின்னர், சொட்டு நீலம் கலந்த நீரால் சுத்தம் செய்தால் இவ்விடங்கள் பளபளப்புடன் இருக்கும்.
- தீப்பெட்டி ஈரமாகி நமுநமுப்பாக இருந்தால் அரிசி மாவை அதன் மீது தடவிவிட்டு கொளுத்தினால் டக் என ஏற்றவரும்.
தொடரும்…..
Leave a Reply