கோயிலின் அமைப்பு

29/07/2019 Sujatha Kameswaran 0

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அமைப்பு இருக்கும். பெரும்பாலும் புராதன கோயில்களின் அமைப்பு ஒரே விதத்திலேயே அமையும். ஆகம விதிகளின்படி கோயிலை நிர்மாணித்திருப்பர். கோயிலுக்கு அதிலுள்ள பல விஷயங்கள் அழகு சேர்த்தாலும், கோயிலின் மண்டபங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு மண்டபமும் ஒவ்வொரு நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்; 1. அர்த்த மண்டபம் 2. மஹா மண்டபம் 3. நிருத்த மண்டபம் 4. பதினாறுகால் மண்டபம் 5. நூற்றுக்கால் (அ) ஆயிரங்கால் […]

உடற்பயிற்சி & உள்ளப்பயிற்சி – 2

25/07/2019 Sujatha Kameswaran 0

நமது முன்னோர்கள், நேர மேலாண்மை மற்றும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த விஷயங்களை கையாள்வதில் பெரும் வல்லுனர்கள். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரிவினருக்கான செயல்களும் மிகச்சிறந்த முறையிலேயே நடந்துவந்தன. விவசாயிகள் காலத்தை கருத்தில் கொண்டு விவசாயப்பயிர்களை, காலம் மற்றும் தட்பவெப்பத்திற்கு ஏற்றார்போல் விளைவித்தனர். மேலும் அவர்களுக்கான உடற்பயிற்சி விவசாயத்தொழிலை செய்வதன் மூலமே நடந்து முடிந்தது. ஏர் பிடித்து உழுதல், நிலத்திற்கு நீர் பாய்ச்சுதல் என இயற்கையோடு ஒன்றிய பல வேலைகளின் மூலம் […]

தனித்துவம்

13/07/2019 Sujatha Kameswaran 0

உலகில் உள்ள அனைவருக்கும் தனித்தன்மை உண்டு. அதுவே அவர்களின் தனித்துவம்.  இரட்டையர்களானாலும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியே சில திறமைகள், செயல்பாடுகள் இருக்கும். தனித்துவமும் ஒரு தத்துவமே. நமது தனித்துவத்தை – தனித்திறமையை நாமே உணரமுடியும். நமது தனித்திறமையை எவ்வாறு அறிவது? மிகவும் எளிய வழியில் நம்மாலேயே உணரமுடியும். அதாவது, நமக்கு இயல்பாகவும், எளிதாகவும் எவ்வெவற்றையெல்லாம்  செய்ய முடிகிறதோ அவ்வவற்றின் மூலமாக நமது தனித்திறனை நமது செயல்திறன்கள் மூலம் அறியலாம். ஒவ்வொரு வெற்றியாளரும் […]