உரைகல்

‘கல்’ இந்த வார்த்தையை உச்சரித்தால் சாதாரணமாகத்தான் தோன்றும்.

ஆனால் அதன் பல விதங்கள் மற்றும் அதன் பயன்பாட்டினை மனதில் நிறுத்தி உச்சரித்தோம் என்றால்…..

உலகில் உள்ள அனைத்திற்கும் ஏதேனும் ஒரு பயன்பாடு உண்டு. பயனற்றது என எதை எடுத்து வைத்தாலும், அது ஒரு காலத்தில் பயனுள்ளதாகவே இருந்துள்ளதை அறியலாம். மேலும், தற்சமயம் பயனற்றது எனக் கருதப்படுவது, பயனற்றது என்பதற்கு உதாரணமாகப் பயன்படுகிறது. ஆகவே எல்லாவற்றிலும் ஒரு பயன் உண்டு.

இப்பொழுது கல் என்பதனை நோக்கினால், பாறாங்கற்களினால் கட்டப்பட்டப் பாலத்தில் நடுநடுவே இருக்கும் இடைவெளிகளை அடைக்க சிறு கற்களே பயன்படும். பாதை முதல் பாலம் வரை, ஆசனம் முதல் ஆண்டவன் வரை அனைத்து விதத்திலும் கற்களின் பயன்பாடு உள்ளது.

உரைகல்

உரைகல் என்பது உரை+கல் என உரையும் கல், உரைக்கும் கல் என பல பொருள் கொள்ளலாம்.

பிரித்து பொருள் கூறுவது எதுவாகினும், ஓர் செய்தியை உணர்த்தும் கல் என்பது பொதுப்பொருள். அதாவது, தங்கத்தை உரைத்துப்பார்த்து அதன் தரத்தை உணர்த்துவதும் உரைக்கல் எனப்படும். மேலும், நடந்த நிகழ்வுகளை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்தியம்ப வைக்கப்படும் கல்வெட்டுகளும், செய்தியை உரைக்கும் கல் எனப்படும்.

உரைகல்லில் தங்கத்தைத் தேய்த்தால் தங்கத்தின் தன்மை வெளிப்படும். இவ்வாறு செய்கையில் கல்லைவிட தங்கமே தேயும். மற்றப் பொருட்கள் கொண்டு தேய்தால், அதற்காக கல் தன்னைத்தானே தேய்த்தும், சிதைந்தும் கொடுக்காது. ஆனால் சிற்பம், தெய்வச்சிலை என அதனுடைய தன்மை கொண்டப் பொருட்களை செய்யுங்கால் தன்னைத்தானே விட்டுக்கொடுக்கும்.

நாம் அனைவருமே உரைகற்கள்தான். நம்முடன் சேரும் மற்றவர் குணநலன்களை உரைக்கிறோம். நம்மூலமாக பல தகவல்களை மற்றவர்க்கு உரைக்கிறோம். ஆனால் நம்மைப்பற்றி நாம் அறிந்தோமா………?

அறிந்துகொள்வோம். உரைப்பதோடு நிற்காமல், உணரவும் ஆரம்பிப்போம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*