அனைவருக்கும் முகம் உள்ளது. அதை எல்லோராலும் பார்க்க முடியும். ஆனால் அவர்களுக்குள் ஒளிந்துள்ள இதர முகங்களை யார் அறிவர்? காலம் உணர்த்தும்.
நமது உள் முகங்கள் வெளிப்படும்போது, அவற்றைப் பல நேரங்களில் சரியானது என்றும், அவை அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றது என்றும் நாம் நியாயப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், மற்றவர்களின் இந்நிலைப்பாட்டை பெரும்பாலும் நாம் ஏற்றுக்கொள்வதேயில்லை.
சில மாற்று முகங்கள் தவிர்க்கமுடியாதது. பச்சிளம் குழந்தைகளிடம் நாம் காட்டும் முகம். குழந்தைகளின் குறும்பு முகம். கொஞ்சும் முகம். ஆர்வ முகம் என்பன எவராலும் தவிர்க்கமுடியாது, மாற்ற முடியாத, மாற்றக்கூடாது முகங்கள்.
ஒவ்வொரு சூழலிலும் மற்றவரின் மாற்றுமுகங்களை விமர்சிக்கும் நாம், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
நம்மை மற்றவர் எவ்வாறு நடத்தவேண்டும் என நாம் விரும்புகிறோமோ, அவ்வாறே நாம் மற்றவர்களை நடத்தவேண்டும்.
முகங்களில் மாற்றங்கள் இருந்தாலும், அவற்றின் காரணத்தை அறிந்து நாம் பிரதிபலிப்பதே சாலச்சிறந்தது. அப்போது உறவுமுறைக்கு பங்கம் வராது. நிம்மதியும் குறையாது.
அனைவரும் பச்சோந்திகளே, இக்காலகட்டத்தில் மானுட தர்மம் மாறாமல், இடத்தைப்பொறுத்து மாறுவதில் தவறில்லை.
Leave a Reply