உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

 

முற்கால மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக முறைபடுத்திக் கொண்டனர்.

காலையில் எழுவது முதல், இரவு உறங்கும் வரையில் அவர்கள் கடைபிடித்த அனைத்து விஷயங்களுமே பெரும்பாலும் அவர்தம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம்பயப்பதாகவே அமைந்தது.

அதிகாலையில் எழுதல் (இன்று, அதிகாலை நேர வேலை என்றால் ஒழிய பெரும்பாலோர் எழுவதில்லை).

பல்தேய்க்க வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியை உபயோகித்தல். பல்வலி எனில் லவங்கம், உப்பு என இயற்கை முறை வைத்தியத்தையே மேற்கொள்ளல். (இன்று அவை பற்பசையில், அல்லது மசாலாப்பொடிகளில்…)

சூரிய நமஸ்காரம் மற்றும் உடற்பயிற்சிகளை சில செய்தல். (இன்று அவை யோகா வகுப்புக்களின் வாயிலாக, கிடைத்த நேரத்தில், நேரம் காலம் இல்லாமல்..)

ஆற்று நீரிலோ, கிணற்றிலிருந்து நீரை இரைத்தும் குளித்தல், நீந்துவதும், நீர் இரைப்பதும் உடற்பயிற்சியே (இன்று நீச்சல் பயிற்சி எனவும், நீர் இரைத்தல் போன்ற உடற்பயிற்சிக்கூட உபகரண பயிற்சிகளும்…)

துணிகளை அன்றைக்கன்றே துவைத்தல். (இப்பொழுதுள்ளது போல் வார இறுதிக்கு சேர்த்துவைப்பதில்லை)

சத்துள்ள உணவுகளை உண்ணல். (junk food என்கிற கலாசாரம் இல்லை) எண்ணை பண்டங்கள் தின்றாலும் அதற்கேற்ற உடலுழைப்பின் மூலம் கொழுப்பு மிகவும் உடலில் சேராதவாறு தற்காத்துக்கொள்ள அறிந்திருந்தனர்.

இயற்கையைக் காத்தல். (இன்றுபோல் புகைப்படத்திற்காகவும், விளம்பரத்திற்காவும், மரக்கன்றுகளை நட்டுவிட்டு, விட்டுவிடுதல் அல்ல)

நீர்நிலைகளையும், தாவரங்களையும், பிராணிகளையும் பேணிப் பாதுகாத்தனர். (விளம்பரத்திற்காக அல்ல)

இரவு உணவை இனிதே நேரம்கடத்தாமல் முடித்து, இயற்கைக் காற்றை அனுபவித்து உறங்கினர்.

ஒழுக்கநெறிகளை குடும்பத்தினரிடமிருந்தும் சூழலாலும் எளிதில் கற்றனர்.  தற்காப்புக்கலைகளை நன்கு பயின்றனர். ஊராருடன் கூடி வாழ்ந்தனர். ஒற்றுமையின் வலிமையை உணர்ந்திருந்தனர். (ஏதோ ஒரு போராட்டத்திற்காகக்கூடி, வன்முறையைக் கையாண்டு, மற்றவரின் பொழுதையும், பொதுச்சொத்துக்களையும் வீணாக்கவில்லை)

பெரியோருக்கும், கற்றோருக்கும் மதிப்பிருந்தது. பணத்திற்கல்ல.

வீதிநாடகங்கள் மூலம் விழிப்புணர்வும், பகுத்துணர்வும் பெற்றனர்.

மொத்தத்தில், உடலையும், உள்ளத்தையும் சரிவரப் பேணினர்.

 

 

 

2 Comments on உடற்பயிற்சி / உள்ளப்பயிற்சி

    • Good morning
      thanks for your positive comment. this is my own creation. will post further data shortly.
      sorry for delayed reply
      once again thank you

Leave a Reply

Your email address will not be published.


*