அழகிய நிலப்பரப்பு, செழிப்பான வளங்கள் திறமைமிக்க மக்கள் என இவை அனைத்தையும் கொண்டது இந்தியா. ஆனால் இவையெல்லாம் படிக்கவும் பேசவும் இனிமையாய் அமையும் வார்த்தைகள்.
தலைப்பின் குறிகள் மூலமே இந்தியாவின் நிலையை அறியலாம்.
ஒன்று, ஆச்சர்யங்களை (நல்ல வகையில்) அழகுடன் விளங்கிய இந்தியா இன்று கேள்விக்குறியுடன் திகழ்கின்றது.
இரண்டு, தன்னிகரில்லாமல் நிமிர்ந்த நிலையில் இருந்த இந்தியா இன்று அனைவருக்கும் அனுசரித்து வளைந்து தன்னிலையை கேள்விக்குறியாய் கொண்டுள்ளது.
உதாரணமாக, இயல்பான இயற்கையை விரும்பும் அனைத்து உண்மையான சந்நியாசிகளும், துறவிகளும் இந்தியாவிலேயே அதிகமாய் இருந்தனர். இப்பொழுதும் ஆங்காங்கே ஒருசிலர் இருக்கின்றனர். அதில் சிலர் பதவி, பணம் ஆசைக் கொண்ட முற்றும் (என்கிற வார்த்தையை துறந்த) துறவிகள்.
கல்வியும், கலைகளும், மருந்துகள் அதற்கான மூலிகைகள் காலநிலைகளுக்கு ஏற்ற துணிவகைகளான பருத்தி, பட்டு, கம்பளி போன்றவற்றை தன்னகத்தே கொண்டது இந்தியா.
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்ற பாடல் அன்றிலிருந்து இன்று வரை விடைக்காண இயலாத கேள்விகளைக் கொண்டுள்ளது.
நல்ல தரமான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கும் அடுத்த தரப்பொருட்கள் அதிக விலையில் super markets எனப்படும் பெரிய அங்காடிகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மிஞ்சிய கடைசி ரக பொருட்களே இந்தியாவில் ஏனையோருக்கு, எளியோருக்கு கிடைக்கின்றன.
இந்தியாவிலேயே விளையும் உயர் தரப் பொருட்கள் இந்திய மக்களுக்கே கிடைப்பது அரிதாகிறது. அவ்வாறேனும் ஏற்றுமதி செய்யப்படுவதால் மக்களுக்கு நன்மையாயெனில் அது சந்தேகமே. ஏற்றுமதியால் கிடைக்கும் லாபமும் உழைப்பாளிகளுக்கு முறையாகப் போய் சேர்வதில்லை.
தொடரும்…..
Leave a Reply