இருவழியொக்கும் சொல்
(Palindrome)
இருவழியொக்கும் சொல்(Palindrome) என்பது இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வாசித்தால் ஒரே மாதிரி இருக்கும் சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.
இது மாலைமாற்று என்ற சொல் மூலமும் அறியப்படுகிறது.
இதன் ஆங்கிலப்பெயர் Palindrome என்பது கிரேக்க வேர் சொல்லிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலத்தில்:
level, civic, pop, noon, refer, madam, mam, radar, malayalam, ere, wow, racecar, redder, dad, nun, reviver, minim, amma, appa
தமிழில்:
குடகு, காக்கா, பாப்பா, மாலாபோலாமா, மாமா, தாத்தா, மோருபோருமோ, யானைபூனையா, தேருவருதே, விகடகவி, சிவகுறுமுறுகுசிவ.
சீர்காழி – திருமாலைமாற்று என்னும் திருஞானசம்பந்த பெருமானின் தேவாரத் திருப்பதிகம் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக திகழ்வது ஆகும்.
Leave a Reply