500,1000 ரூபாய்கள் செல்லாது ! ?
பிரதமர் மோடி அவர்கள் இன்று ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று(8/11/16) நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மற்றிக்கொள்ள இயலும் எனவும் அவரது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் ஊழலைத் தடுத்தல், கருப்புப்பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என்பன சார்ந்த கொள்கைகளை கையாண்டு இவற்றிற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறுக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பிரதமர் மோடி அவர்கள் நாட்டுமக்களுக்கென சிறப்புரையாற்றுகையில் வெளியிட்ட முக்கிய கருத்துக்களின் தொகுப்பு:
♦ இன்று நள்ளிரவு முதல் ரூபாய்.500/- மற்றும் ரூபாய்.1000/- நோட்டுக்கள் செல்லாது.
♦ வரும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். அதாவது 30/12/2016 -ம் தேதிக்குள் ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுக்களை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
♦ மேலும் ஏ.டி.எம்-கள் நாளையும், நாளை மறுநாளும் செயல்படாது. அதாவது, நாளை 9/11/16 மற்றும், நாளை மறுநாள் 10/11/16 ஆகிய இருதேதிகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயங்காது.
♦ நாளை 9/11/16 ஒருநாள் மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் செயல்படாது.
♦ ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிப்பதே அரசின் நோக்கம்.
♦ காசோலை, டி.டி., கிரடிட் கார்ட், மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை.
♦ நவம்பர் 11-ம் தேதி வரை ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை உபயோகிக்கலாம்.
♦ மேலும் தற்சமயம் கையிருப்பில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தகுந்த அடையாள அட்டையைக் காண்பித்தே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள இயலும்.
♦ இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அரசு கூடிய விரைவில் விநியோகிக்க உள்ளது. இந்நோட்டுகள் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது என சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழைகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதியே இவ்வரசு செயல்பட்டுவருகிறது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படுகிறது. இதற்கான சிரமத்திற்கு தான் வருந்துவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியா எனும் திட்டத்தை கொணர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கான பல்வேறு நலதிட்டங்களை அவ்வப்போது வெளியிட்டு அமுல்படுத்திவருவது அனைவரும் அறிந்ததே.
பலதரபட்ட மக்களை சிந்திக்க வைத்திருக்கும் இவ்வறிக்கைக் குறித்து உங்களது கருத்து?
Leave a Reply