திருமால் பெருமை

20/11/2016 Sujatha Kameswaran 1

திருமால் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாளின் சிலை வடிவம் அற்புதம் நிறைந்தது. பொதுவாகக் கருங்கற்சிலைகளில் சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். செதுக்கியிருப்பதன் அடையாளம் தெரியும். ஆனால் ஏழுமலையானின் திருவுருவச்சிலையில் அவ்வாறான எவ்வித அடையாளமும் தெரியவில்லை என்பது அவருக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யும் பூஜாரிகளின் தகவல். மேலும், திருவுருவச்சிலையில் நெற்றிச்சுட்டி, நாகாபரணங்கள், காதணிகள், புருவங்கள், விரல்கள் அனைத்தும் பளப்பளப்போடு திகழ்கின்றன. வேங்கடாசலபதியின் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. […]

விடுகதையா இந்த வாழ்க்கை? – வாலிபப்பருவம்

15/11/2016 Sujatha Kameswaran 0

வாலிபப்பருவம் – விடலைப்பருவம் வாழ்க்கைச்சக்கரத்தில் வாலிபப்பருவம் என்பது பல புதிர்களுடன் கூடிய இனிய பருவம். அடுத்தடுத்தக்கட்டத்தில் பல வித்தியாசமான கோணங்களில் பல கேள்விகளையும் அதற்குத் தகுந்த பதில்களையும், சில நேரங்களில் எதிர்மறை பதில்களையும் கொண்டு அமையும் விடுகதைகள் பல கொண்ட வாழ்க்கையில், பெரும் விடுகதையாகவும் சவாலாகவும் அமையும் பருவம் இந்த வாலிபப்பருவம். இப்பருவத்தினருக்கு, தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரிவரபுரிவதில்லை. இக்குழப்பத்தின் உச்சகட்டமே உள தடுமாற்றம் அதனால் ஏற்படும் செயல் தடுமாற்றங்கள் […]

அக்கினிக் குஞ்சு –

10/11/2016 Sujatha Kameswaran 0

அக்கினிக்குஞ்சு – பாரதியார் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம். பொருள்: 1.(விடுதலை வேட்கையை / சமுதாயத்தை உத்தேசித்து) பிற நாட்டினரின் ஆதிக்கத்தால், நம் இந்திய நாடு வனம் போலக் காட்சியளித்தது. இந்நாட்டில் வாழும் மனிதர்கள் அடிமைத்தனத்தில் ஆட்பட்டு உணர்வற்று மரம்போல் இருந்தனர். அவர்தம் மனம் எனும் பொந்தில் […]

Rs.500,1000 செல்லாது ! ?

08/11/2016 Sujatha Kameswaran 0

500,1000 ரூபாய்கள் செல்லாது ! ? பிரதமர் மோடி அவர்கள் இன்று ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று(8/11/16) நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மற்றிக்கொள்ள இயலும் எனவும் அவரது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஊழலைத் தடுத்தல், கருப்புப்பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என்பன சார்ந்த கொள்கைகளை கையாண்டு இவற்றிற்கு பொதுமக்கள் அனைவரும் […]

எண்களின் சிறப்பு – எண் 1

03/11/2016 Sujatha Kameswaran 0

எண் – 1  “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வாசகத்தின்படி மனிதருக்கு கண்கள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கும் மேலே எண்ணும் எழுத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அங்கஹீனர்களான மாற்றுத்திறனாளிகளாயினும் அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பனவற்றில் சிறந்தது அவர் கற்றக்கல்வியே ஆகும். இவ்வாறான சிறப்புகள் மிக்க எண் எழுத்தில், எண்களின் சிறப்பைப்பற்றி ஓரளவு அறிய முற்படுவோம். முதலாவதாக, எண் 1-ஐப் பற்றி அறிந்துகொள்ளலாம். கணிதம்: 1. ஒன்று என்பது […]

தெய்வச் சிலைகள்

02/11/2016 Sujatha Kameswaran 1

தெய்வச்சிலைகள்-தெய்வீகச்சிலைகள் இந்தியத் திருநாட்டின் பாரம்பரியமிக்க பல விஷயங்களில் தெய்வச் சிலைகள் பெரும் சிறப்புகள் வாய்ந்தவைகளாகத் திகழ்கின்றன. ஒளி வடிவான இறைவனுக்கு பக்தர்கள் தங்கள் கற்பனைத் திறனாலும், தெய்வத்துடன் நெருக்கமான உணர்வு வேண்டும் என்பதாலும் உருவ அமைப்பை ஏற்படுத்தினர். ஆதி மனிதர்கள் முதலில் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியலாம். சூரியன், அக்னி(நெருப்பு), காற்று, மலை, நீர், பூமி ஆகிய இயற்கையை வழிபட்ட மக்கள், தங்கள் வழிபாட்டின் அடுத்த […]

பஞ்ச பூதத்தலங்கள்

01/11/2016 Sujatha Kameswaran 0

பஞ்ச பூதத்தலங்கள் மண்/நிலம் (ப்ருத்வி), நீர் (அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாஷம்) ஆகிய ஐம்பூதங்களிலும் பரந்து விளங்குவதே சிவலிங்கம் ஆகும். இதனை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு இவ்வைம்பெரும் பூதங்களின் அடிப்படையில் ஐந்து தலங்களை அமைத்தனர் நம் முன்னோர்கள். காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் (மண்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) என தமிழகத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவைப்போன்றே பாண்டியநாட்டின் தென்பகுதியிலும் பஞ்சபூதத்தலங்கள் […]