விடுகதையா இந்த வாழ்க்கை?

விடுகதையா இந்த வாழ்க்கை?!

 

ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளைக்கொண்டும், ஆனால் அவற்றிற்கு பதில்கள் சரியானபடி இல்லாமல் அமைந்திருக்கின்றது இவ்வாழ்க்கை. விடைக்காணமுடியா விசித்திரமான புதிர், இந்த வாழ்க்கை.

மற்றவருக்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்றும், நடந்து முடிந்த நிகழ்ச்சியானால் அதனை எவ்வாறு சிறப்பாகச் செய்திருக்காலாமென்றும் நமக்கு சரியாகத் தெரிகின்றது.

ஆனால், அவை நமக்கு என வரும்போது, தக்க சமயத்தில்,  நம் புத்தி, உணர்ச்சி இவைகள் தக்கவாறு செயல்படாமையால், பல செயல்களில் சொதப்பல் ஏற்படுகின்றன.

நமக்கும் அர்ஜுனனுக்கு இருந்தாற்போல், ஓர் கண்ணன் இருந்து, நம் நலனில், நம் உயர்வில், நம் நல்வாழ்வு குறித்துப் பெரிதும் அக்கறைக்கொண்டு, நமக்குத் தேவையானபோதெல்லாம், அறிவுரைக்கூறிக்கொண்டும், வேண்டிய உதவிகளை செய்துக்கொண்டும் இருந்தால் நன்றாகவே இருக்கும்.

நாம் நினைப்பது சிறிதளவும் பிசகாமல் நடைபெறவேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலும் நம் அனைவரிடமும் உள்ளது. அது பிறழி நடக்கையில், மேலும் எதிர்மறை விளைவு ஏற்படுகையில் மனம் அலைபாய்கிறது. அந்நிகழ்விற்கு எவை காரணமோ அவற்றின்மேல் நம் கோபம் திரும்புகிறது.

மனிதவாழ்வில், ஒவ்வொரு பருவத்திலும், நாம் ஒவ்வொருவரும், நம்மை மிகப்பெரியவர்களாகவே உணர்கிறோம். வெகுசிலரே, சில சமயங்களில் மட்டும், தங்கள் இயலாமைக்காரணமாக தன் நிலையை உணர்ந்து செயல்படுகின்றனர்.

விடுகதைத் தொடரும்…..

 

2 Comments on விடுகதையா இந்த வாழ்க்கை?

Leave a Reply

Your email address will not be published.


*