கொன்றை வேந்தன்

21/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை. மனதில் மறைத்து வைக்கின்ற தீய எண்ணங்களைத் தவிர வேறு பெரிய வஞ்சம் ஏதுவுமில்லை. 55. நேரா நோன்பு சீராகாது. மனதை சரியான முறையில் அடக்கி வைக்காமல் மேற்கொள்கின்ற விரதத்தால் சிறப்பு கிடையாது.

கொன்றை வேந்தன்

20/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. மிகச்சிறியச் செயலாக இருந்தாலும், நன்கு யோசித்தப்பிறகே, அதனைச் செய்ய முயற்சிக்க வேண்டும். 53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு. அறநூல்களைப் படித்து அறிந்து, அவை கூறுகின்ற நல்லப்பண்புகளுடன் வாழவேண்டும்.

கொன்றை வேந்தன்

19/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 50. நிற்கக் கற்றல் சொல்திறம்பாமை. நிறைவான கல்வியறிவு என்பது, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதே ஆகும். 51. நீரகம் பொருந்திய ஊரகத்திரு. நீர் வளமுடைய ஊரில் குடியிருக்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

18/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும். நற்குணம் கொண்டவர்களை விட்டு, தீயவர்களிடம் கொள்ளும் நட்பு துன்பத்தையே தரும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் குறையின்றி வாழ்ந்தால், அந்நாட்டில் தீமைகள் ஏதும் இருக்காது.

கொன்றை வேந்தன்

17/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது. மற்றவரிடம் கெஞ்சிக்கேட்டு(பிச்சையெடுத்து) உண்பதைவிட, தானே உழுது அல்லது உழைத்து உண்ணலாம். 47. தோழனோடும் ஏழைமை பேசேல். நெருங்கிய நண்பரிடம்கூட உனது வறுமை நிலையை வெளிப்படுத்திப் புலம்பக்கூடாது.

கொன்றை வேந்தன்

16/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும். மேற்கொண்டு பொருளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யாமல், தன்னிடம் இருக்கும் செல்வத்தை செலவு செய்வது, அழிவைத்தரும். 45. தையும் மாசியும் வையகத்து உறங்கு. பனிபொழியும் மாதங்களான தை மற்றும் மாசியில், வைக்கோலால் வேயப்பட்ட வீட்டில் உறங்கவேண்டும்.

கொன்றை வேந்தன்

15/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கணவனைப் பற்றி அவதூறு பேசும் பெண்ணை, அக்குடும்பத்தின் எமன் என்று எனலாம். 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும். தெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால், முன்னர் தவம் செய்து பெற்ற புண்ணியம் அனைத்தும் அழிந்துபோகும்.

கொன்றை வேந்தன்

14/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 40. தீராக் கோபம் போராய் முடியும். நீங்காத பெருங்கோபம், இறுதியில் பெரும் போர் ஏற்படச்செய்யும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனின் துன்பம் கண்டு துடிக்காத பெண், அடிவயிற்றில் கட்டிய நெருப்பைப் போன்றவளாவாள்.

கொன்றை வேந்தன்

13/05/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 38. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை. பெற்ற தாயைவிட சிறந்த வணங்கத்தக்க கோயில் இல்லை.   39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி வெளிநாடு சென்றாவது, பொருள் ஈட்டவேண்டும்.  

திருக்குறள்

12/05/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி (1-4-10) ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே ஆகும். செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. Seyarpaala thorum arane oruvarku uyarpaala thorum pazhi That is virtue which each ought to do, and that is vice which each should shun

1 2 3 4 5