எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

திட்டப்பட்டியல்:

இலக்கை அடைய,  நிச்சயமான விருப்பத்தை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். நம்மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.  நம் குறிக்கோளினால் ஏற்படும் நன்மைகளையும் தீமைகளையும் பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.

தடைகளை அறிந்துக்கொண்டு அவற்றை நீக்க அல்லது கடந்து வர வழிமுறைகளை வகுக்கவேண்டும்.  இலக்கை சார்ந்த தற்போதைய நிலவரத்தையும், எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி குறித்தும் கணித்தல் மிக அவசியம்.

தேவையான மற்ற காரணிகளை, உதவிகளை மற்றும் ஒத்துழைப்பை பட்டியலிடல். இலக்கை நோக்கிய செயல்முறை திட்டமிடல் சாலச்சிறந்தது. குறிக்கோளை அடைய காலவரையறை நிர்ணயத்துக்கொள்ளவேண்டும். மனக்கண்ணோட்டத்தில் இலட்சியப்பாதையையும், வெற்றியையும் காட்சிப்படுத்துதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். இவை அனைத்திற்கும் சிகரமாக அமைவது, விடாமுயற்சியும், செயலில் உறுதியும்.

மேலும், மகிழ்ச்சியான மனநிலை, ஊக்கமான வார்த்தைகள், தெளிவான சிந்தனை, போதுமான காரணிகள், தேவைக்கேற்ப ஓய்வு, எந்நிலையையும் சமாளிக்கும் திறன், செயலின் அடுத்தக்கட்டத்தைக் குறித்தத் தேடல் ஆய்வு, நல்லனவற்றை ஏற்றல், அல்லனவற்றை நீக்கல், தொழிலில் பிடிப்பு, உடனிருப்போருடன் ஒற்றுமை, விமர்சனங்களை சரியான முறையில் ஏற்றல், தொலைநோக்குப்பார்வை போன்றவற்றினால் எத்தகைய நல்ல இலக்கையும் சிறந்தமுறையில் அடைந்துவிடலாம்.

இவ்வாறு ஒவ்வொரு செயலிற்கும் திட்டமிட்டு செயல்படல் வெற்றியைத் தரும்.

இனி வெற்றிக்கான இலக்கை நோக்கிய உங்கள் எண்ணங்கள் தொடரட்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*