April 2016
திருக்குறள்
திருக்குறள் குறள் – 15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (1-2-5) Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar traange Etuppadhooum Ellaam Mazhai பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றிகுறித்த மனநிலை: என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற வாக்கின்படி, நாம் எதைக்குறித்து அதிகமாக நினைக்கிறோமோ அதன் சாயல் நம்மிடம் தோன்றும். எனவே நாம் புரியவேண்டிய செயல்கள் பற்றிய அறிவுடன் நம் சிந்தனைகளை அச்செயல்களைக் குறித்து ஒருமுகப்படுத்தவேண்டும். செய்யவேண்டியவைக்குறித்த மனத்தெளிவும், மனத்துணிவும், நம்மை இலக்கின் அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுவிடும். லட்சியப்பாதையில் மனதை நீடிக்கசெய்வதே முதல் காரியம். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பலன் விரைவில் கிட்டும். நமது விருப்பம், […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் (1-2-4) Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik Kaal மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியடைய வழிகள்: அனைவரின் எண்ணமும் எடுத்த காரியத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதுதான். யாரும் தோற்கவிரும்புவதில்லை. வெற்றி என்பது செய்யும் வேலையின் அல்லது எடுத்த செயலில் எதிர்நோக்கிய பலனை அல்லது அடையவேண்டிய இலக்கை மனநிறைவுடன் அடைவது எனலாம். வெற்றியடைய சில வழிமுறைகள் உள்ளன. தேர்ந்தெடுக்கும் செயலைப்பற்றிய அறிவு, அதனை செய்யவேண்டிய முறைகளைப்பற்றிய தெளிவு, அனுபவ அறிவு, ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் துணிவு, பிரச்சனைகளை எதிர்கொள்ள பக்குவம், கடினப்பாதைகளை கடந்துவர […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் ஆளுமை: தன்னை ஆளத்தெரிந்தவரே மற்றவரையும், வேலையும் சிறப்பாக ஆளுவார். தன்னை ஆளுவதென்பது, எண்ணங்களையும், செயல்களையும், நேரத்தையும், உணர்ச்சிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. ஒரு குழந்தையின் ஆளுமை சுமார் அதன் ஐந்து வயதிற்குள் அமைந்துவிடும். நல்ல அன்பு, பரிவு, வழிநடத்தல், நேர்மறை சிந்தனை, ஊக்கம் முதலியவற்றுடன் வளரும் குழந்தைகள் சிறந்த நிலையான ஆளுமையுடன் வாழும். கடுஞ்சொற்களுக்கும், அதிக தண்டனைகளுக்கும், பெரும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படும் குழந்தைகள் பயம், தன்னம்பிக்கையின்மை, சுய கருத்து […]
ஆத்திசூடி
ஆத்திசூடி 66. நன்மை கடைப்பிடி – நன்மை தரும் செயல்களைத் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். 67. நாடு ஒப்பன செய் – நாட்டு மக்கள் ஏற்கக்கூடியவைகளை செய்யவேண்டும். 68. நிலையில் பிரியேல் – இருக்கும் நிலையிலிருந்து உயரவேண்டும். தாழ்ந்துவிடக்கூடாது. 69. நீர் விளையாடேல் – ஆழமான நீர் நிலைகளில் விளையாடக்கூடாது. 70. நுண்மை […]
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் வண்ணங்கள் லட்சியமும், அறிவும்: குறிக்கோளில்லாதவர் துடுப்பில்லாத படகைபோல அலைப்பாயவேண்டியிருக்கும். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்னவற்றை செய்யவேண்டும் என்ற எண்ணமும், அடைய வேண்டிய இலக்குபற்றிய சிந்தனையும் அவசியம். திட்டமிட்ட இலக்கை எட்டியவுடன் ஏற்படும் மனமகிழ்ச்சி மிகவும் இனிமையானது. குறிக்கோளை ஏற்படுத்திக்கொள்ள, அதை அடைய, அதனைப்பற்றியும் அதனைச்சார்ந்த செய்திகளையும் அறிந்திருத்தல் மிக அவசியம். எதனை அடைய உள்ளுகிறோமோ அதனைப்பற்றிய சுய அறிவும், நமது அனுபவ அறிவு, பிறரது அனுபவப்பகிர்வு மற்றும் பிறகாரணிகளால் […]
திருக்குறள்
திருக்குறள் குறள் – 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. (1-2-2) Thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth thuppaaya thoovum mazhai. உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருள்களை, மழைதான் விளைவித்துத் தருகிறது. அதே மழை, தானும் ஓர் உணவுப் பொருளாகவும் குடிநீர் வடிவில் அமைகிறது. It is rain which produces pure food-grains for us. The very same rain serves us […]