கொன்றை வேந்தன்

24/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே. கொன்றை மலர்களைச் சூடிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகப் பெருமானின் திருவடியை நாம் எப்போதும் போற்றி வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் நம்மைப் பெற்ற தாயும் தந்தையும் நாம் முதலில் அறிந்துகொண்டு வணங்கவேண்டிய தெய்வங்கள் ஆவர்.

எண்ணங்கள் வண்ணங்கள்

23/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் செயலும், பழக்கமும்: நாம் செய்யும் செயல்களில் சில, நாளடைவில் நமக்கு பிடித்தமானதாகின்றன. அவைகளில் பெரும்பாலனவை அன்றாடப்பழக்கமாகின்றன. அவ்வாறு, பழகிய, பழக்கப்பட்ட செயல்கள் நல்ல முன்னேற்றத்தை அடைகின்றன. நன்கு பழகிய இடங்களில் நமது நடவடிக்கைகளுக்கும், சற்றே அறிமுகமான இடங்களில் நாம் செய்யும் செயல்களுக்கும் உண்டான வித்யாசம் போல இதுவும் அமையும். ‘கைவந்த கலை’, என்பதற்கிணங்க நம் பழக்கத்தில் வந்த செயல்களை மேலும் பட்டைத்தீட்டி மெருகேற்றமுடியும். அறிமுக செயல்களே தயக்கமாக […]

ஆத்திசூடி

23/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 106. வேண்டி வினை செயேல்   – எதையும் எதிர்பார்த்து பிறர்க்கு உதவி செய்யவேண்டாம். 107. வைகறைத் துயில் எழு       – அதிகாலையில் உறக்கம் விட்டு எழுந்துவிடுவது நல்லது. 108. ஒன்னாரைத் தேறேல்          – பகைவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்காதே. 109. ஓரம் சொல்லேல்                   […]

எண்ணங்கள் வண்ணங்கள்

22/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் தூண்டுகோல்: ‘சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்’, என்ற வாக்கியத்தின்படி எத்தனைத் திறைமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கென ஏதேனும் ஒரு தூண்டுகோல் மிகவும் அவசியம். அத்தூண்டுகோல், நேர்மறையானதோ, எதிர்மறையானதோ எவ்வாறாயினும், அதன் துணைகொண்டே ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர். வாழ்வில் அனுபவித்த வேதனை, உற்றாரின் தூண்டுதல், மற்றோரின் தூண்டுதல், நம்பிய சிலரின் எதிர்மறை நடவடிக்கைகள், பேச்சுக்கள் இவற்றில் ஏதேனும் ஒரு அல்லது சில காரணங்களால் வாழ்க்கை மாறுதல் அடைகின்றது. சிறுபொறியாய் கிளம்பும் இவை […]

திருக்குறள்

22/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு (1-2-10) Neerin dramaiyaa dhulakenin yaaryaarkkum vaanin dramaiyaadhu ozhukku எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without […]

ஆத்திசூடி

22/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 101. வித்தை விரும்பு             – நல்ல பல கலைகளை விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டும். 102. வீடு பெற நில்                  – முக்தி அடைவதையே குறிக்கோளாக்க் கொள்ளவேண்டும். 103. உத்தமனாய் இரு           – நேர்மையாகவும், நல்ல குணத்தோடும் இருக்கவேண்டும். 104. ஊருடன் கூடி வாழ்   […]

எண்ணங்கள் வண்ணங்கள்

21/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் மன உற்சாகமும், தளர்ச்சியும்: மனித வாழ்விற்கு ஓர் உந்து சக்தியாய் இருப்பது, மனதின் உற்சாகமாகும். மனம் சமநிலையில் இருந்தால், எவ்விதமானப் பிரச்சனைக்கும் தீர்வு எளிதில் கிடைக்கும். மனதின் உற்சாகம், நம் இயல்பை வெளிக்கொணருவதுடன், நம்மால் இயலுவனவற்றை வெளிப்படுத்துவதுடன், நமது இயலாமை எவை என்பதனையும், தெளிவாக, தாழ்வுமனப்பான்மை ஏற்படாதவாறு நமக்கு உணர்த்துகிறது. உற்சாகம் குன்றிய மனத்துடன் இருக்கையில், மிகச்சாதாரண இயலாமையும், பெரும் இழப்புபோலத் தோன்றும், நமது இயல்பை மறைத்துவிடும். […]

ஆத்திசூடி

21/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 96. மை விழியார் மனை அகல்     – விலைமாதர் வீட்டிற்குப் போகக்கூடாது. 97. மொழிவது அறமொழி               – சொல்வதை, பிறர் சந்தேகங்கள் தீரும்படி விளக்கமாகக் கூறவேண்டும். 98. மோகத்தை முனி                         – வீண் ஆசைகளை வெறுத்து விலகவும். 99. வல்லமை பேசேல்         […]

திருக்குறள்

21/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்(1-2-9) Thaanam thavamirandum thangaa viyanulakam vaanam vazhangaa dhenin மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world

1 2 3 4 5 9