எண்ணங்கள் வண்ணங்கள்
இலட்சியத்தை தீர்மானித்தல்:
இலட்சியம் எதுவென்று நிச்சயமானால், அதனை அடையும் வழிமுறைகளும் எளிதாகும். இலட்சியத்தை நிர்ணயிக்க சிலவற்றை நெறிபடுத்திக்கொள்ளவேண்டும். அவை,
1. சுய விருப்பம், மற்றும் திறமையை அறிதல்.
2. மற்றவர் வழிகாட்டுதல் இருக்கலாம், ஆனால் மற்றவர்களையே பின்பற்றக்கூடாது. அதாவது, மற்றவர்களுக்காக நாம் வாழலாம், ஆனால் மற்றவர் வாழ்க்கையை நாம் வாழமுடியாது.
3. இலட்சியத்தை அடைய, செய்யவேண்டிய செயல்களையும், அதற்கான செலவுகளையும் திட்டமிடவேண்டும்.
4. நம் இலட்சியத்தின் எதிர்கால சந்தை மதிப்பீட்டையும், கணித்துக்கொள்ளவேண்டும்.
5. திறமையை மேலும் மெருகூட்டிக்கொள்ளலல்.
6. மற்றவர்களின் அனுபவ அறிவு, நம் அனுபவ அறிவு, இவற்றை மதிப்பீடு செய்தல்.
7. ஒவ்வொரு செயலின் வெற்றியும் – கடின உழைப்பு, அறிவு, திறமை என்பனவற்றை படிகளாகக்கொண்டு இருக்கின்றது.
8. இலட்சியத்தின் அடுத்த நிலைகளை திட்டமிடல்.
9. காலப்போக்கில் செயல்பாடுகளில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த, யுக்திகளை கையாள, திறனை வளர்த்துக்கொள்ளல்.
10. இவற்றுடன் மிகமுக்கியமாக, இலட்சியத்தை அடையும்வரை, சலிப்பற்ற, உற்சாகமான, விடாமுயற்சி மிகவும் அவசியம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply