எண்ணங்கள் வண்ணங்கள்
இச்சையும் அனிச்சையும்:
பெரும்பாலன செயல்கள் இச்சையின் காரணமாகவே நிகழ்கின்றன. உதாரணமாக சாப்பிடுவது, விதவிதமாய் உடுத்துவது, வெளியில் எங்காவது செல்வது, படிப்பது, எழுதுவது, ஏதேனும் செயல்புரிவது, உறங்குவது, போன்ற பல செயல்கள் நமது விருப்பத்தால் நடைபெறுவதாகும்.
எனினும், செயல்புரிந்து ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இவற்றில் பல வெகுவிரைவில் அனிச்சை செயல்களாகின்றன. அதாவது நம் புத்தியின் கட்டளை இல்லாமலேயே நடைபெறுகின்றன.
முதலில் நாமாக சாப்பிடும் போது, என்ன உணவு உள்ளதோ அதனை, பார்த்து, மெதுவாக எடுத்து, உண்பது சிறிது நேரம் எடுக்கும் செயலாக இருக்கும். ஆனால், சில நாட்கள் சாப்பிட்டு பழகியபின், தட்டில் இடப்பட்டதை பார்பதோ, உணவை சரியாக வாயில் வைக்க முயற்சிப்பதோ இல்லை. வெகு லாவகமாக உண்ணும் கலையில் தேர்ந்துவிடுவோம்.
இதனைப்போலவே, முதன்முதலில் படிக்க ஆரம்பிக்கையில், அல்லது எழுதத் தொடங்கையில் இருந்த பொறுமை, பழகியபின் இருப்பதில்லை.
இச்சையில்-விருப்பத்தில், பார்த்து பார்த்து செய்யும் செயல்கள், அனிச்சையில்-வெகுவாகப் பழகிய செயல்களில், ஆழ்ந்த கவனத்தை எதிர்பார்ப்பதில்லை.
விருப்பப்படும் ஒவ்வொரு செயலையும், நாளடைவில் அனிச்சை செயலாக மாற்ற, அவைகுறித்த நமது திடசிந்தனையும், சிலநாள் கவனமும், அச்செயலகள் நம் பழக்கம் ஆகும்வரை அவசியம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply