எண்ணங்கள் வண்ணங்கள்
சொல்வதும் செய்வதும்:
குறிக்கோள் குறித்த எண்ணங்கள் எப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காமல் இருக்க சில பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும்.
முதலில் எடுத்த செயலை என்னால் செய்யமுடியும் என்று உள்ளத்திலும் வெளியிலும் திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளவேண்டும்.
எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் மிகுந்த சக்தி உண்டு. அதன்படி, நாம் நமக்கு வேண்டியவற்றை மீண்டும் மீண்டும் உரைப்பதனால் அவை நமதாகிவிடும். நமது செயல்களை மேம்படுத்த உதவும்.
மேலும் அச்செயலகள் குறித்து செய்துபார்த்தல் (கற்பனையாக) செயல்களின் முழுமையை உணரவைக்கும்.
உதாரணமாக, ஆசிரியராக விரும்பும் ஒருவர், தன்னை அவ்வாறு கற்பனை செய்துகொண்டு, பாடம் நடத்துவதுபோல் செய்து பார்ப்பது, பிற்காலத்தில் சிறந்த பயனைத்தரும்.
இத்தகு முயற்சிகள் நம் செயல்களின் அச்சை உருவாக்கி, அவை முழுவடிவம் பெற வழிசெய்யும் என்பது திண்ணம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply