எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணமும் செயலும்:

வெற்றியை நோக்கிய பயணத்தில் முதலாவதாக நமது மனதை தயார்ப்படுத்துதல் மிகவும் அவசியம்.

செயலைக் குறித்தும், அதன் முடிவான வெற்றியைக்குறித்தும், திடமான எண்ணத்தை நம் மனதில் நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

‘எண்ணமே வாழ்வு’, என்பதற்கிணங்க, நமது மனதில் விதைத்த செயலிற்கான எண்ணம், வழிமுறைகள், மற்றும் பல்வேறு நடைமுறைகள் என்பன அவ்விதைக்கு இடப்படும் உரமாகவும், ஊற்றப்படும் நீராகவும் அமைந்து பெரும் பலனளிக்கும்.

இவ்வாறு எண்ணுவதில், செயலைக்குறித்து எத்தனைமுறை, எத்தனை ஆழமாக நாம் சிந்திக்கிறோம் என்பது முதல் படியாக அமையும்.

இரண்டாவதாக, அச்செயலைக்குறித்தக் கற்பனை. மனக்கண்ணால் நமது இலக்கைக் கண்டோமானால் விரைவாக அதனை அடையமுடியும் என்பது ஆன்றோர் கருத்து.
உற்சாகத்துடன் கூடிய ஈடுபாடு மூன்றாவதும் முக்கியமானதும் ஆகும்.

இதனினும் இன்றியமையாதது செயலிற்கானக் கால அளவு. இது நான்காவது காரணியாக அமையும்.

மனக்கற்பனையை தெளிவுபடுத்தி, அதற்குச் செயல் வடிவம் தந்து, தொடர்ந்து அதனைப்பற்றிச் சிந்தித்து, உற்சாகத்துடன் செயல்பட்டால், இலக்கை அடைவது வெகு வெகு சுலபம்.

எண்ணங்கள் தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*