எண்ணங்கள் வண்ணங்கள்
தூண்டுகோல்:
‘சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்’, என்ற வாக்கியத்தின்படி எத்தனைத் திறைமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கென ஏதேனும் ஒரு தூண்டுகோல் மிகவும் அவசியம்.
அத்தூண்டுகோல், நேர்மறையானதோ, எதிர்மறையானதோ எவ்வாறாயினும், அதன் துணைகொண்டே ஒவ்வொருவரும் சாதிக்கின்றனர்.
வாழ்வில் அனுபவித்த வேதனை, உற்றாரின் தூண்டுதல், மற்றோரின் தூண்டுதல், நம்பிய சிலரின் எதிர்மறை நடவடிக்கைகள், பேச்சுக்கள் இவற்றில் ஏதேனும் ஒரு அல்லது சில காரணங்களால் வாழ்க்கை மாறுதல் அடைகின்றது.
சிறுபொறியாய் கிளம்பும் இவை விஸ்வரூபம் எடுத்து ஒருவரின் வாழ்வை மாற்றுவதை பல இடங்களில் காண்கிறோம்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருளில் நம்மை ஊக்கப்படுத்திக்கொள்ளும் வகையிலான விஷயங்களை எடுத்துக்கொண்டு, நேர்மறையான எண்ணத்தில் (positive thinking), நேர்மறையாக செயல்பட்டு இலக்கை அடைவது சிறந்தது.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply