எண்ணங்கள் வண்ணங்கள்
வெற்றியின் தடங்கல்:
செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும்.
எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம்.
ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, Twitter போன்றவற்றில் ஈடுபடுவது, அவற்றில் கிடைக்கும் விமர்சனத்திற்காகதான்.
எதிர்மறையான – செயலைத்தாழ்த்தி உரைக்கும்படியான விமர்சனம், தன்னம்பிக்கையைத் தகர்த்துவிடுவதாக அமையும். இவ்வாறான விமர்சனங்களை கருத்தில்கொள்ளும் எவராயினும், அவரது சுயமதிப்பைக் குறைத்துவிடும். அவர் புதியமுயற்சியில் ஈடுபடுவதையும் தடைப்படுத்திவிடும்.
எனவே, இன்னார் இனியர் எனக்கொள்ளாமல், எவரது செயலாயினும், ஆக்கப்பூர்வமான, மனதை பாதிக்காத விமர்சனங்கள் நன்மை பயக்கும்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply