எண்ணம் செயலாகின்றது; செயல் பழக்கம் ஆகின்றது;
பழக்கம் நடத்தை ஆகின்றது; நடத்தை வாழ்க்கைமுறை ஆகின்றது. *எண்ணமே வாழ்வாகின்றது*
எண்ணங்கள் வண்ணங்கள்
வாய்ப்புகளும் வசதிகளும்:
ஒவ்வொரு பெரிய செயலிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் பல உள்ளன. அவற்றை கண்டுணர்ந்து அவற்றைப்பயன்படுத்திக் கொள்வது நமது திறமை மற்றும் வசதியைப்பொருத்தது.
வசதி என்பது மனம், உடல் மற்றும் பொருளாதாரம் இவற்றை பொருத்து அமையும். பெரிய அறிஞனாக இருந்தாலும், அடுத்த வேளைக்கான உணவு பற்றிய சிந்தனையுள்ளவர்க்கு, சாதனைகள் படைப்பதில் சிரமம் இருக்கும்.
தான் மேற்கொள்ளவிருக்கும் காரியத்திற்கான பொருட்கள் மற்றும் தேவையானவற்றை வாங்கவும் அவருக்கு பொருளாதார வசதி அவசியமாகிறது.
இவற்றைக்குறித்த விஷயங்களில் முதலாவதாக செய்யவேண்டியது, எதிர்காலத்தைக்குறித்து திட்டமிடுவது. ஒரு வருடத்திற்குத் தேவையானவைகள், ஐந்து வருடங்களுக்குத் தேவையானவைகள் என ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கான நமது பொருளாதார தேவைகள் குறித்து திட்டங்கள் வரையறுத்துக்கொள்ளவேண்டும்.
என்னென்னத் தேவைகளை, எந்தெந்தச் செலவுகளைச் சந்திக்க நேரிடும், ஓய்வுகால சேமிப்பு என அனைத்தைப்பற்றியும் திட்டமிடுதல் அவசியம். இச்செலவுகளுக்கான திட்டத்தில் நடைமுறையின்போது (அந்தந்த நேரங்களில்) சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும், பெரும்பாலும் திட்டத்தின் படி ஒத்துப்போவதால் இம்முயற்சி சிறப்பானதாகும்.
பொருளாதாரத் திட்டத்தினை வரையறுப்பதன் மூலம், இலக்கை அடைய புது உத்வேகம் கிடைக்கும். எதிர்கால பொருளாதாரத்திட்டத்தினை வரையறுத்து, பின் யதார்த்த பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு, அதன்மூலம் தேவையானவற்றைப்பற்றியத் தெளிவினைப்பெறலாம்.
எண்ணங்கள் தொடரும்…
Leave a Reply