எண்ணங்கள் வண்ணங்கள்

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார்

எண்ணங்கள் வண்ணங்கள்

உறவுகளின் ஒத்துழைப்பு:
நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன.

வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் நமக்கும் இடையிலான சுமூகமான பழக்கவழக்கங்களும், அவர்களுக்கு நம்மிடம் உண்டான தேவைகளும், பரிச்சயமுமே, நமது தனித்துவத்தை உணர்த்தும்.
மற்றவர்களிடம் சுமூகமான உறவு என்பது, அவர்களது கருத்துக்களுக்கும் செவிசாய்த்து, நமது கருத்துக்களையும் அவர்களிடம் எவ்வித சச்சரவும் இல்லாமல் வெளிப்படுத்தி, பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதேயாகும்.

இரு நபர்கள் அல்லது ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு தூரம் சேர்ந்து சிரித்து மகிழ்கின்றன்ர் என்பது, அவர்களிடையே விஷயங்கள் எவ்வளவு சிறப்பாகச் சென்று கொண்டிருக்கின்றன என்பதனை அளவிடுவதற்கான சிறந்த வழியாகும்.

ஓர் உறவு உண்மையிலேயே மகிழ்ச்சித் தருவதாக இருக்கும்போது, அவ்வுறவில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒன்றாக இருக்கும்போது அதிகமாக சிரித்துப் பேசி மகிழ்வர். அதே ஓர் உறவு கசப்பாக மாறும்போது, முதலில் அதிலிருந்து காணாமல் போகும் விஷயம் அன்பான சிரிப்புதான்.

நிறுவனங்களைப்பொருத்தவரையும் இதே விதி பொருந்தும்.  நிறுவனங்களில், தொழில்களில் மக்கள் ஓர் அங்கம் இல்லை. அம்மக்களைக்கொண்டே நிறுவனங்களும், தொழில்களும். நம்முடன் வாழ்பவர்கள், நம்மை சார்ந்து வாழ்பவர்கள், நம்முடன் பணிபுரிவர்களும், நமது வாடிக்கையாளர்கள் என இவர்களுடன் இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வதும், தன்னம்பிக்கை, உற்சாகம் மற்றும் உத்வேகம் ஆகியவை தழைப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதும் ஒரு நிர்வாகியின் மிகமுக்கிய பொறுப்பாகும்.

எனவே, மனித இனத்திற்கு மன மகிழ்ச்சியும், நிம்மதியும் இருந்தாலே புது யுக்திகளும், அதற்கேற்ற உற்சாகமான செயல்பாடுகளும் இருக்கும்.

எண்ணங்கள் தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*