எண்ணங்கள் வண்ணங்கள்

காரியத்தில் உறுதி வேண்டும் – மகாகவி பாரதியார்

எண்ணங்கள் வண்ணங்கள்

மன நிம்மதி:

          அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று மனநிம்மதியாகும். மனத்தில் செயலைப்பற்றிய அலைகள் இருந்தாலும், ஆழ்கடலின் அமைதிபோல ஒருவித அமைதியை, நிம்மதியை மனம் கொண்டிருக்கவேண்டும். மனமானது நமது உள்ளார்ந்த வழிகாட்டி. இதன் வழிகாட்டுதலுக்கு மாறாகச் செயல்படும்போது மனம் தனது அமைதியை இழக்கிறது.

          நமது செயல்களின் வழியாக மட்டுமல்லாமல், குடும்பத்தினர், உற்றார், உறவினர், பயிலும் இடம், பணிபுரியும் இடம், நண்பர்கள், அண்டை, அயலார் இவர்களின் காரணமாகவும், மன நிம்மதிக்கு ஊறு நேரலாம்.

          மன அமைதியின் பொழுது இருக்கும் நிலைதான் நமது இயல்பான இயற்கையான நிலை என்பது பலருக்கும் புரிவதில்லை. மனநிம்மதியே முதல் கொள்கையாகக் கொள்ளவேண்டும். மற்ற இலக்குகள் இதனைச்சார்ந்தே அமையும்.

          மனமகிழ்ச்சியுடன் ஒரு வேலையைச் செய்வதற்கும், மனப்போராட்டத்திற்கிடையே ஒரு செயலை செய்வதற்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன. மேலும் இதில் ஒரு சுலபமான ரகசியப்பொருள் அடங்கியுள்ளது. அது யாதெனில், நமது மனமகிழ்ச்சியின் கட்டுப்பாடு, நம்மிடமே உள்ளது. நமது எண்ணங்களும், செயல்களுமே நமது மனநிம்மதிக்குக்காரணம். மற்றகாரணிகள் அனைத்தும் இதன் பிறகே.

          சுருக்கமாகக் கூறினால், பயம், கோபம், சந்தேகம், குற்ற உணர்வு, வெறுப்பு மற்றும் கவலை ஆகிய உணர்ச்சிகளிலிருந்து முழுமையாக விடுபடும்போது உண்மையான மனநிம்மதியையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியும்.

எண்ணங்கள் தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*