எண்ணங்கள் வண்ணங்கள்

கனவு மெய்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்.
-மகாகவி பாரதியார்

எண்ணங்கள் வண்ணங்கள்

வேண்டுவன வேண்டாமை:
வாழ்வை முன்னோக்கி சிறப்பாய், சலிப்பில்லாமல் வாழ, லட்சியம்(லட்சியங்கள்) மிக அவசியம். இலக்கை நிர்ணயித்தப்பின்னரே வாழ்வு சுவாரசியம் அடையும். நாம் செய்யவேண்டுவன எவை, செய்யக்கூடாதவை எவை, என்பதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இலக்கை நோக்கி செயல்பட்டால் எளிதில் வெற்றிபெறலாம்.
லட்சியங்கள் குறித்த எண்ணங்கள் தெளிவானப் படக்காட்சிகளாக நம்மை வழிநடத்தும். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் உரைத்தாற்போல், இலக்கைக்குறித்து கனவு காண்பது, எளிதில் அவ்விலக்கை அடைய வழிவகுக்கும்.
சிந்தனையை முன்னோக்கிச் செலுத்தி, நமக்கு சரியெனத்தோன்றும் வாழ்க்கையைக் கற்பனை செய்வது அவசியம்.
எதிர்மறை சிந்தனைகள் இல்லாத இடத்தில் நம்மால் இயல்பாய் இருக்க இயலும். நேர்மறை எண்ணங்களும் அதன் சக்தியும் நம்மை மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் சிறப்புறச்செய்யும்.

நமது லட்சியத்தை அடைய முதலில் நமக்கு வேண்டியவைகள் மற்றும் வேண்டாதவைகள் பற்றிய தெளிவு அவசியம். சில காரணிகளை சரியாக வைத்துக்கொள்வதன் மூலம் நமது பணி சுலபமாகும்.

எண்ணங்கள் தொடரும்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*