உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.
-மகாகவி பாரதியார்
எண்ணங்கள் வண்ணங்கள்
நம்பிக்கை:
உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும்.
பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, அதையே பார்க்கிறோம். இங்கும் நேர்மறையான எண்ணங்கள் மிகமுக்கியம். உதாரணமாக எடுத்த செயலில் வெற்றியடைவோம் என நேர்மறை எண்ணத்துடன் நம்பினால், நிச்சயம் வெற்றிகிட்டும்.
மாறாக வெற்றி என்பது அதிர்ஷ்டம் எனவும், நம்மால் செய்ய இயலுமா எனும் எதிர்மறை எண்ணத்துடன், அவநம்பிக்கையுடன் செயலை மேற்கொண்டால், அதன் பலனும் எதிர்மறையாகவே அமையும்.
நம்பிக்கை மனபான்மை கொண்ட மக்கள் உயர்ந்த சாதனையாளர்களாகவும், மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குபவர்களாகவும் உள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.
எண்ணங்கள் தொடரும்…..
Leave a Reply