எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு
எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து
எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும்
எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம்
எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’.
எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும்.
எண்ணங்களில் பலபரிமாணங்கள்:
நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. சில நேரங்களில் இடையில் தோன்றிய பல்வேறு சிந்தனைகளால், முதலில் நாம் நினைத்ததை தாண்டி நம் சிந்தனை எங்கோ பிரயாணிக்கிறது. நம் மனத்தின் மேல் நமக்குள்ளக் கட்டுப்பாட்டைப் பொறுத்தே, நம் எண்ணங்களையும் செயல்களையும் இலக்கை நோக்கி அமைக்கமுடியும்.
எண்ணஓட்டம்:
நாம் எண்ணும் எண்ணங்களும், மனத்தில் நிறுத்தும் காட்சிகளும், அனுபவிக்கும் உணர்வுகளும் இவற்றுடன் ஒத்துப்போகும் வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தூண்டுகின்றன.
நம் சிந்தனைகளும் செயல்களும் ஒன்றோடொன்று ஒத்துழைக்க சில விதிமுறைகளை பின்பற்றலாம். அவை, 1.கட்டுப்பாடு, 2. காரிய காரணம், 3.நம்பிக்கை மற்றும் 4.எதிர்பார்ப்பு
எண்ணுவது தொடரும்…..
Leave a Reply