எண்ணங்கள் வண்ணங்கள்

எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு                                                                               பிறந்த மொழி எனும் குழந்தை,
பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது,                                                                                                                 நாட்டை சிறப்பித்தது,                                                                                                                                                               உலகமே போற்றும்படி வளர்ந்து உயர்ந்தது.

எண்ணங்கள் வண்ணங்கள்

சிந்தனைகளும் செயல்களும் ஒரே நேர்கோட்டில் செல்ல முன்னர் கூறிய விதிகளின் விளக்கங்களைக்காண்போம்.

1.கட்டுப்பாடு

நம் செயல்கள், நம் வாழ்க்கை எவ்வளவுக்கெவ்வளவு நமது கட்டுப்பாட்டில் இருக்கிறாதோ அவ்வளவுக்கவ்வளவு, நமக்கு நிம்மதி மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத நமக்கு வேண்டிய செயல்களைக்குறித்த செயல்பாட்டின்போது நமது மனம் நிம்மதியை இழக்கிறது. அந்நேரங்களில், அவை தொடர்ந்து நீடித்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இம்மனஅழுத்தம் சோர்வையும், எரிச்சலையும், கோபத்தையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்தி, தெளிவான எண்ணங்களும் செயல்களும் மேற்கொள்ளமுடியாமைக்கும் வழிவகுக்கின்றன.
இதே நம் கட்டுப்பாட்டில் நமது செயல்கள் அமைந்துவிட்டால், புது உற்சாகமும், ஒருவித காரிய பிடிப்பும், தெளிவான எண்ணஓட்டத்தினால், செயல்களில் தெளிவும் அமையும்.
பெரும்பாலான சமயங்களில் செயல்கள் சிலவற்றை நாம் மற்றவர்களுக்காக செய்தாலும், நம் எண்ணங்களின் கட்டுப்பாடு நம்மிடமே உள்ளது. எந்தவொரு சூழ்நிலையைப்பற்றி நாம் சிந்திக்கும் விதம்தான், நம் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன. நாம் உணரும் விதம்தான் நம் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன.

சுயகட்டுப்பாடு, சுயதேர்ச்சி, சுயஒழுக்கம் ஆகியவை நம் சிந்தனைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பெரிதும் துணைபுரிவன.
மேலும் இதை சரிசெய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அச்சூழலை நமக்குத் தக்கவாறு மாற்றி அமைத்தல். மற்றொன்று அச்சூழலிலிருந்து விலகிச் செல்வது. இவை அச்சூழலைப் பொறுத்தும், அவற்றில் நமது பங்கைப்பொறுத்தும் அமையும்.

நம் வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நமது மிகமுக்கிய கடமையாகும். இது சிறந்த வெற்றிக்கும், மனநிம்மதிக்கும் அடித்தளமாக அமையும்.

எண்ணுவது தொடரும்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*